சன் டிவி அரட்டை அரங்கம் Vs விஜய் டிவி நீயா நானா! கோபிநாத்தை வெளியேற்றினால் நஷ்டம் சேனலுக்கே: பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் நடத்தப்படும் நீயா நானா நிகழ்ச்சி, அரட்டை அரங்கத்தைவிட வெற்றி பெற்றது.,. இதில் சிக்கல் என்னவென்றால், சமூக நீதி சிந்தனை உள்ளவர்கள், சமத்துவ சிந்தனை உள்ளவர்கள், முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள், கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள், என தங்களுடைய திறமையை மட்டுமே நம்பி வந்தவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி தந்தது விஜய் டிவிதான். அங்கிருந்துதான் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு போன்ற கலைஞர்கள் வெளிவந்துள்ளார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் கூறியிருக்கிறார்.
Aagayam யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ராஜ கம்பீரன், "நீயா நானா 15 வருடங்களுக்கு மேலாக கொடி கட்டி பறக்கும் நிகழ்ச்சியாகும். நீயா நானா நிகழ்ச்சிக்கு முன்பு, சன் டிவியில் விசு தலைமையில், அரட்டை அரங்கம் நடத்தப்பட்டது.. நேர்மையானவரான விசு, சற்று சனாதன சிந்தனை கொண்டவரும்கூட.. அரசியல் முரண்பாடு ஏற்பட்டதுமே ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் நடத்தினார்..

விசுவின் அரட்டை அரங்கம்
ஆனாலும் முதன்முதலில் டாக் ஷோவில் பிரபலமானது சன் டிவியின் அரட்டை அரங்கம்தான்.. விசுவுக்கு பிறகு டி.ராஜேந்தர் உட்பட பலரும் அந்த நிகழ்ச்சியை நடத்தினாலும், விசு மட்டுமே அந்தநிகழ்ச்சியின் பிராண்டாக இருந்தார்.
இதற்கு பிறகுதான் விஜய் டிவியில் நீயா நானா நடத்தப்பட்டது.. ஆனால், அது அரட்டை அரங்கத்தைவிட வெற்றி பெற்றது.,. இதில் சிக்கல் என்னவென்றால், சமூக நீதி சிந்தனை உள்ளவர்கள், சமத்துவ சிந்தனை உள்ளவர்கள், முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள், கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள், என தங்களுடைய திறமையை மட்டுமே நம்பி வந்தவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி தந்தது விஜய் டிவிதான். அங்கிருந்துதான் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு போன்ற கலைஞர்கள் வெளிவந்துள்ளார்கள்..
உயர்சாதி நிறுவனங்கள்
உயர்சாதி நிறுவனங்கள் நினைப்பதுபோல், கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைப்பதுபோல, அவர்களின் கருத்தாக்கத்தில் விஜய் டிவியில் நெறியாளர்கள் யாரும் இல்லை.. எனவே, முற்போக்கு, சமத்துவ சிந்தனை உடைய கோபிநாத் போன்றோர் விஜய் டிவியில் இருப்பது, வலதுசாரி கருத்துக்கள் பரவுவதற்கு தடையாக இருப்பதாக நினைக்கிறார்கள்.
ஏற்கனவே தேசிய அளவில் எல்லா ஊடகங்களுக்கும் ஒரு அழுத்தம் தரப்படுகிறது. எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதும் வரையறுக்கப்படுகிறது. டிவி நிறுவனங்களிலிருந்து பணிபுரிந்த செந்தில்வேல், ஜீவசகாப்தம், குணசேகரன் போன்றோர் நீக்கப்பட்டதற்கு காரணம், இவர்களது அரசியல் பின்புலம், இடதுசாரி சிந்தனையாக உள்ளது, தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கு அது தடையாகவும் இருக்கிறது.
நெறியாளர்கள் - தலைமை பொறுப்பு
அப்படி தடையாக இருக்கக்கூடிய நெறியாளர்கள் இருக்கக்கூடாது, இதுபோன்றவர்கள் தலைமை பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கவனமாக உள்ளன. அதனாலதான், செய்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் பாஜகவுக்கு ஆதரவான வேடத்தில்தான் வாழ வேண்டியிருக்கிறது.
நீயா நானா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஆண்டனி என்பவர்தான், ஷோவின் டைரக்டரான இவரது வித்தியாசமான சிந்தனையே அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிரதான காரணம். அதேபோல, கோபிநாத்தின் பேச்சாற்றல், பிறரை தனவயப்படுத்தக்கூடிய ஆற்றலும் கொண்டவர்.
கோபிநாத் நீயா நானா
ஒருவேளை விஜய டிவியிலிருந்து கோபிநாத் நீக்கப்பட்டால், அதைவிட பெரிய சேனலில் கோபிநாத் இடம்பெறக்கூடும்.. அது சன் டிவியாகவும் இருக்கலாம். அரட்டை அரங்கம் விடுபட்டதுக்கு பிறகு, ஒரு பெரிய டாக் ஷோ எதுவும் சன்டிவியில் நடத்தப்படவும் இல்லை.. இனிமேல் அது, கோபிநாத் மூலமாகவும் நடைபெறலாம். திறமைசாலிகளை சேனலிலிருந்து நீக்கினால், அவர்களது திறமை மங்கிவிடாது. சிந்திக்கிறவனை எதன்வழியாகவும் தடை செய்ய முடியாது.. கோபிநாத்தை வெளியேற்றினால் இழப்பு விஜய் டிவிக்குதான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications