வாழ்க்கையில் நான் செய்த பெரிய தப்பு.. இப்போ நினைத்தாலும் அசிங்கமா இருக்கு! உருக்கமாக பேசிய சுந்தரி சீரியல் கேப்ரியல்லா
சென்னை: சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை கேப்ரியல்லா பற்றி தற்போது ஒரு இன்டர்வியூ வைரலாகி வருகிறது. குடும்பம், காதல், கஷ்டங்கள்-எல்லாத்தையும் நேராக, எந்த மறைப்பும் இல்லாமல் பேசியிருப்பது தான் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சுந்தரி சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் இரண்டு சீசன்களிலும் ஹீரோயினாக நடித்த கேப்ரியல்லா, அந்த கதாபாத்திரம் மூலமாகவே வீட்டுக்கு வீடு அறிமுகமானவர். சாதாரண பெண்ணாக தொடங்கி பல சவால்களை எதிர்கொள்ளும் சுந்தரி கதாபாத்திரத்தை அவர் ரொம்ப நிஜமாகவே எடுத்துச் சென்றதால் தான், மக்கள் மத்தியில் அவளுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்தது.
திரைப்படங்களில் நடிப்பு
ஆனா, சின்னத்திரைக்கு முன்னாடியே அவருக்கு சினிமா அனுபவம் இருக்கிறது. நயன்தாரா நடித்த 'ஆரா' படத்திலும், ராகவா லாரன்ஸ் இயக்கிய 'காஞ்சனா 3' படத்திலும் கேப்ரியல்லா நடித்திருக்கிறார். ஆனாலும் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் புகழ் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகுதான் சீரியல் பக்கம் கவனம் திருப்பி, 'சுந்தரி' மூலம் பெரிய பிரேக் கிடைத்தது.
நடிகை கேப்ரியல்லா குடும்ப வாழ்க்கை
இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அதே அளவுக்கு சுவாரஸ்யமானது. குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, அந்த படங்களுக்கு கேமராமேனாக வேலை பார்த்த சுருளி உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு காதலாக மாறி, பல எதிர்ப்புகளை கடந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. குடும்ப வாழ்க்கையிலும் செட்டிலாகி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் கேப்ரியல்லா.
சீரியல் நடிகை பேட்டி
இப்படி எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு கஷ்டமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
"எங்க அப்பா நான் டான்ஸ் பண்ணுறதுக்கு ஒத்துக்கலை. அதனால நான் ஒரு கடிதம் எழுதி வச்சிட்டு, யாருக்கும் சொல்லாம சென்னைக்கு வந்துட்டேன். ஆனா பிறகு வீட்டிலிருந்து வந்து சமாதானம் பண்ணி, என்ன திரும்ப ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அப்போ ஊர்ல எல்லாரும் என்னை பற்றி ரொம்ப மோசமா பேசினாங்க... 'இவ எவனோடோ ஓடிப்போயிட்டா... கல்யாணம் பண்ணிட்டா...'ன்னு பலவிதமா அசிங்கப்படுத்தினாங்க. அது தான் நான் செய்த பெரிய தவறு. இப்போ நினைச்சாலும் ரொம்ப அவமானமா இருக்கு" என்று உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்மையான பகிர்வு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. "இவ்வளவு கஷ்டம் இருந்தும் இவ்வளவு உயரம் வந்திருக்காங்க" என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
உறவினர்களின் அவமானம்
சோசியல் மீடியாவிலும் கேப்ரியல்லா ரொம்ப ஆக்டிவாக இருப்பவர். தனது குடும்ப புகைப்படங்கள், ஷூட்டிங் அப்டேட்கள், குழந்தையுடன் இருக்கும் க்யூட் மோமென்ட்ஸ்-இவை எல்லாம் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதனால் ரசிகர்களுடன் ஒரு நல்ல கனெக்ஷனையும் வைத்திருக்கிறார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பெண், எதிர்ப்புகள், விமர்சனங்கள், அவமானங்கள் எல்லாத்தையும் கடந்து இன்று சின்னத்திரையில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். அந்த பயணம் தான் இப்போது பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications