சுந்தரி சீரியல் நடிகைக்கு திடீர் கல்யாணம்.. அவரே வெளியிட்ட தகவல்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் அனு கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்க்கு வருண் தேவ் என்பவரோடு இன்று குருவாயூரில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா, சுந்தரி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த ஸ்ரீ கோபிகா தமிழ் ரசிகர்களுக்கு அதிகமாக பரீட்சயமானவர். இவருடைய சொந்த ஊர், கேரளாவாக இருந்தாலும் தமிழில் இவர் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதிலும் சின்னத்திரை ரசிகர்கள் இவரை பார்த்தாலே இவரா இவர் பயங்கரமான ஆளாச்சே என்று சொல்லும் அளவிற்கு இவர் சுந்தரி சீரியலில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கர்ப்பமாக இருந்து பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். இவரை வைத்து அந்த நேரத்தில் அதிகமான மீம்ஸ்கள் வந்தது. சுந்தரி சீரியலில் கதாநாயகி சுந்தரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல அனு கேரக்டரில் ஸ்ரீ கோபிகாவிற்கும் அதிகமான முக்கியத்துவம் இருந்தது.

ஆனால் சீரியலின் முதல் பாகத்தில் இவர் இறப்பது போன்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் அனு உயிரோடு இருப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் உயிரோடு இருப்பது போன்ற காட்சிகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கோபிகா சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பல வருட நண்பனை தான் எங்கேஜ்மென்ட் செய்திருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் அதற்கு பிறகு சில வாரங்களிலேயே அந்த புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டு தயவு செய்து என்னுடைய முடிந்து போன வாழ்க்கையை பற்றி யாரும் பேசாதீர்கள். அது முடிந்ததாகவே இருக்கட்டும் நான் இனி அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன் கசப்புகளை பற்றி மேலும் பேச விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தனக்கு அரேஞ்ச் மேரேஜ் இன்று குருவாயூர் கோவிலில் வைத்து நடைபெற்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications