நான் சுடுகாட்டில் தான் தூங்குறேன்.. வாழ்க்கையில் பட்ட கஷ்டம்! சூப்பர் சிங்கர் சரண் ராஜா உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 11வது சீசன் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பெற்றவர் போட்டியாளர் சரண் ராஜா. குறிப்பாக இளையராஜா பாடல்களை அவர் பாடிய விதம், "இவர்தான் அடுத்த இளையராஜா" என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றது. டைட்டில் வெற்றி பெறவில்லை என்றாலும், மக்கள் மனதை வென்ற குரலாக அவர் மாறினார்.
சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கை பின்னணி பற்றி சரண் ராஜா மிகவும் எளிமையாக பகிர்ந்துள்ளார். அந்த பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"நான் வளர்ந்தது ஒரு சிறிய கிராமத்தில் தான். அங்க நாங்க ஆடு, மாடு, புறா, நாய் எல்லாம் வைத்து ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தோம். நகர வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாம இருந்த எனக்கு, சூப்பர் சிங்கர் வாய்ப்பு கிடைத்ததால்தான் முதன்முறையாக சென்னைக்கு வர நேர்ந்தது," என்று அவர் கூறுகிறார்.
சென்னைக்கு வந்த முதல் நாட்கள் தான் மிகவும் கஷ்டமாக இருந்ததாம். எங்க ஊர்ல காலையில எழுந்தா பசுமை, காற்று, அமைதி... ஆனா இங்க வந்ததும் எல்லாம் புகை, சத்தம், பரபரப்பு. அது எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு என்று அவர் சிரித்தபடியே கூறுகிறார்.
சென்னை தண்ணீரே இப்போது பழகி விட்டதாக சொல்லும் அவர், "எங்க ஊர் தண்ணீரோட டேஸ்ட் வேற லெவல்... அதை எதுவும் மிஞ்சாது," என்று சொல்வதில் அவரது மண்ணின் மீதான பாசம் வெளிப்படுகிறது. ஆனால், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது அவர் கூறிய இன்னொரு விஷயம்.
"எங்களுக்கு சின்ன வீடு இருக்கு... ஆனா நான் ஆடு மாடு மேய்க்க போனா அங்க இருக்கும் கல்லறையில தான் படுத்து தூங்குவேன். அந்த இடத்துல தூங்கும்போது ஒரு நிம்மதி இருக்கும்... சென்னைக்கு வந்த பிறகு அந்த மாதிரி தூக்கம் வரவே இல்ல. எங்க ஊர்ல எந்த இடத்துல இருந்தாலும் நிம்மதியா வாழ முடியும். பெரிய வீடு வேணும், வசதி வேணும் என்று எப்போதும் ஆசைப்பட்டதே கிடையாது. இருப்பதை வைத்து வாழ்க்கையை தள்ளிவிடலாம்," என்று மிகவும் இயல்பாக அவர் கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகள் தான் அவருடைய வாழ்க்கை தத்துவத்தையும், எளிமையான மனதையும் வெளிப்படுத்துகிறது.சூப்பர் சிங்கர் மேடையில் அவர் பாடிய ஒவ்வொரு இளையராஜா பாடலும், அந்த குரலில் இருந்த எமோஷனல் காரணமாக நேரடியாக மனதைத் தொட்டது. இளையராஜாவை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்பது அவரது பெரிய கனவு. அந்த கனவு கூட நிகழ்ச்சியின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் மூலம் நிறைவேறியது. அந்த தருணம் அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது.
டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு உண்மையான குரல், ஒரு எளிமையான மனிதன், ஒரு கிராமத்தின் மண்வாசனை - இதை எல்லாம் சேர்த்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் சரண் ராஜா. சரண் ராஜா உடைய பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமா பாஸ்..!
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications