பிரசவ நேரத்தில் வந்த பிரச்சனையும், மகிழ்ச்சியும்... ஆனால் இப்போ.! அஜய் கிருஷ்ணா மனைவி நெகிழ்ச்சி
பாடகர் அஜய் கிருஷ்ணாவின் மனைவி பிரசவ நேரத்தில் ஆரம்பத்தில் இருந்து தான் பெற்ற கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த அஜய் கிருஷ்ணாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
தன்னுடைய குழந்தை பிறந்த முதல் மாத கொண்டாட்டத்தை நெகிழ்ச்சியோடு அஜய் கிருஷ்ணா கொண்டாடி இருக்கிறார்.
பிரசவ நேரத்தில் தன்னுடைய மனைவி வேதனையால் பட்ட துயரத்தையும் பின்பு குழந்தையை கையில் வாங்கிய போது ஏற்பட்ட நெகழ்ச்சியையும் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.

ரம்யமான பாடல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாகவே பலருடைய மனங்களில் நீங்காத இடத்தை இப்ப வரைக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் போதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவிற்கு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை தத்துரூபமாக பாடி ரசிகர்களின் மனதை வருடி இருக்கிறார்.

இரண்டு முறைப்படி திருமணம்
இந்த நிலையில் தான் அஜய் கிருஷ்ணா சமீபத்தில் தான் காதலித்து வந்த ஜெசி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள். ரசிகர்களும் வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களை கூறி வாழ்த்து கூறி வந்தனர்.

அக்காவால் கிடைத்த வாய்ப்பு
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் அதிகமான பாடல்களை பாடிவரும் அஜய் கிருஷ்ணாவிற்கு மூன்று அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயார் சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில் அவருடைய அக்காவின் அரவணைப்பில் தான் இருந்து வந்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா அக்கா ஒருவரின் முயற்சியினால் தம்பியின் பாட்டு திறமையை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். அதன் மூலமாகத்தான் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணான கண்ணே கலங்காதடி என்ற பாடலை ஆல்பம் போல பாடி பதிவிட்டிருந்தார்.

இணையத்தில் காதல்
இந்த வீடியோவை பார்த்த ஜெஸி அப்போது இவருக்கு நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நன்றி கூறிவிட்டு ஜெஸியின் புகைப்படத்தை பார்த்த அஜய் கிருஷ்ணா அவருடைய நீளமான முடி மீது காதல் ஏற்படவே இருவரும் நண்பர்களாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சமீபத்தில் ஜெஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஒரு மாதம் ஆகிவிட்டது
இந்த நிலையில் அஜய் கிருஷ்ணாவின் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தன்னுடைய குழந்தையோடு அஜய் கிருஷ்ணா மற்றும் அவருடைய மனைவி இருவரும் புகைப்படம் எடுத்து குழந்தை பிறக்கும் போது அவர்கள் பட்ட வேதனை மற்றும் அதற்குப் பிறகு கிடைத்த மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கின்றனர். பிரசவ வலி ஏற்பட்ட ஆரம்ப நேரத்தில் இருந்து அதைத் தொடர்ந்து குழந்தை கையில் கிடைத்த பிறகு கிடைத்த மகிழ்ச்சியை பற்றியும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் எங்கள் குட்டி ஏ.ஜே.க்கு 1வது மாதம் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேற்று தான் நீங்கள் எங்கள் வாழ்வில் வந்து சேர்ந்தது போல் உணர்கிறேன். ஆனால் உங்களிடம் இருந்து ஒரு மாதம் ஆகிறது. மந்திரமும், மகிழ்ச்சியும் கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அருளுவாராக எங்கள் குட்டி உலகம் என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications