சூப்பர் சிங்கர் 10-ல் சர்ப்ரைஸ்.. மூன்றாவது பைனலிஸ்ட் இவர்தான்! வெளியான தகவல், எதிர்பாராத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு செல்லும் போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்வதற்காக ஏற்கனவே ஆதித்யா மற்றும் சாரா சுருதி என இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் மூன்றாவதாக இந்த வாரத்தில் புதிய போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். யார் என்று விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்ற இரண்டு பிரிவாக நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். போட்டியாளர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பல இசையமைப்பாளர்களும், பாடகர்களும் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

பத்தாவது சீசன்
அதே வரிசையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றது. பிரியங்கா அதற்கு முந்தைய வாரம் கலந்து கொள்ளவில்லை என்பதால் இனி பிரியங்கா விஜய் டிவியில் கலந்து கொள்ள மாட்டார் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியை விட்டு விலகிவிட்டார், விஜய் டிவி பிரியங்காவை வெளியே போக சொல்லிவிட்டது, அதனால் தான் அவர் திருமணமே செய்தார் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது.
சிறப்பு விருந்தினர்கள்
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா கடந்த வாரத்தில் மாஸாக சூப்பர் சிங்கர் கலந்து கொண்டார். அதேபோல நடிகர் சசிக்குமாரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். டூரிஸ்ட் பேமிலி திரைப்பட அணியினர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது பல சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள்
அதாவது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இறுதி போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலாவதாக ஆதித்யாவும், இரண்டாவதாக சாரா ஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நஸ்ரினா அம்மா பேச்சு
இவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக யார் தேர்வாக போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. இதற்கான போட்டிகள் இந்த வாரத்தில் நடைபெற்றது. அதில் இந்த வார நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் போதே நஸ்ரினுக்கு மூன்றாவது finalist என்ற டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள். இதை அவர் பெற்றதும் அவருடைய அம்மா எமோஷனல் அந்த பேசியிருந்தார்.
மூன்றாவது பைனல் லிஸ்ட்
என்னுடைய பொண்ணு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமே அவருடைய ஸ்கூல் டீச்சர்ஸ் தான். அவர்களுக்கு தான் நான் இந்த இடத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நஸ்ரின் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. அவர்கள் என் பொண் மீது வைத்திருந்த நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் நஸ்ரின் காப்பாற்றிக் கொண்டிருப்பது பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று பேசி இருந்தார். இதுவரைக்கும் எந்த போட்டியாளரும் பாடிக் கொண்டிருக்கும் போது இதுபோன்று அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது கிடையாது, இதுதான் முதல்முறையாக நஸ்ரின் பெற்றிருக்கிறார் என்று பலரும் நஸ்ரினை பாராட்டி வருகிறார்கள். சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெறுவதற்கு யார் சரியான நபர் என்று நீங்கள் நினைக்கிறீங்க நண்பர்களே!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications