முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டில் வின்னர் கிருஷாங்... காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டில் வின்னர் கிருஷாங் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
முதல்வரை சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை பற்றி முதல் முறையாக கிருஷாங் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

வெற்றியாளருக்கு கிடைக்கும் பாராட்டு
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடமாகவே ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் 8 சீசன்கள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலர் தங்களுடைய பாடல் திறமையை உலகத்திற்கு காட்டி பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த எட்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக இருந்த கிரிஷாங்க்கு முதலமைச்சர் இடம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொடரும் சீசன்கள்
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என்ற இரண்டு வெவ்வேறு நிலையில் போட்டிகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் 9வது சீசன் போட்டி போட்டு தொடங்கி இருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டி நடைபெற்றது. அதன் இறுதி சுற்று கடத்த ஜூன் மாதம் நடைபெற்றது.

மனம் கவர்ந்த பாடல்கள்
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் எட்டாவது சீசன் டைட்டில் வின்னர் பட்டத்தை ஆர்பி கிருஷ்ணா தட்டி தூக்கி இருக்கிறார். இவருடைய பல பாடல்கள் இப்ப வரைக்கும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக ரசிக்கும் வகையில் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக "தலக்கோதும் இளங்காத்து" பாடல் லட்சக்கணக்கான வியூசுக்களை தாண்டி இருக்கிறது. குறிப்பாக எஸ்பிபி குரலில் அப்படியே கிருஷாங் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்து விடுவார். அது மட்டுமல்லாமல் மிமிக்கிரி பாடல்கள் பாடுவதிலோ இவர் வல்லவர்தான். "இருமணம் கொண்ட திருமண" ,மாய நதி இன்று எனும் பாடல் இவருடைய குரலில் பார்த்து, கேட்டு பலரும் வியந்து போய் இருந்தனர்.

முதல் அமைச்சருடன் சந்திப்பு
அத்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2022 ஆம் ஆண்டிற்கான டைட்டில் வின்னராக பட்டம் பெற்ற ஆர்பி கிருஷாங் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது பகிரப்பட்டு கிருஷாங்கிற்க்கு வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் குவித்து வருகிறது. இந்த சிறு வயதிலேயே கிருஷாங் கிடைத்திருக்கும் பாராட்டு மேலும் தொடர வேண்டும் என்று பலர் கூறிவரும் நிலையில் இவருக்கு திரைத்துறையில் இந்த வருடத்தில் அமோகமாக வரவேற்பு இருக்கப் போகிறது என்று பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications