ஐந்து வருட காத்திருப்பு.. கல்யாண மேடையில் பெற்றோரால் வலி.. கண்ணீரோடு பாடகி பிரியா ஜெர்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை ரசிகர்களுக்கு "சூப்பர் சிங்கர்" என்றாலே தனி உணர்ச்சி. அந்த மேடையில் பாடி, மக்களின் மனசில் இடம் பிடித்து, வாழ்க்கையையே மாற்றிக் கொண்ட பல பாடகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் முக்கியமான பெயர் தான் பிரியா ஜெர்சன். கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும், தமிழ்ச் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்களால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பிரியா ஜெர்சன், அந்த சீசனில் முதல் ரன்னரப்பாக வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். வெளிநாடுகளில் இசை பயிற்சி பெற்றவர் என்பதும், அவருடைய பாடல்களில் தெரியும் மெச்சூரிட்டிக்கும், உணர்ச்சிக்கும் காரணம் என்றே சொல்லலாம்.

Super Singer Priya Jerson Zee Tamil

"இனி நான் சிங்கிள் இல்லப்பா" என்று சந்தோஷமாக திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரியா ஜெர்சனுக்கு, வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. திரைத்துறையினர், நண்பர்கள், சூப்பர் சிங்கர் மேடை நண்பர்கள் என பலரும் அவரை வாழ்த்தினார்கள். வெளியிலிருந்து பார்த்தால், எல்லாம் கனவு போலவே தெரிந்தது.

ஆனால் அந்த கனவுக்குள், ஒரு பெரிய வலி இருந்தது என்பது இப்போது தான் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

ஜீ தமிழில் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ள "கில்லாடி ஜோடி" என்ற புதிய ரியாலிட்டி ஷோவில், நடிகரும் தொகுப்பாளருமான சஞ்சீவ் தொகுப்பாளராக கலந்துகொண்டு வருகிறார். இதில் ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டு, தங்களின் புரிதல், காதல், உறவை வெளிப்படுத்தும் விதமாக போட்டியிடுகின்றனர்.

அந்த போட்டியாளர்களின் வரிசையில், பிரியா ஜெர்சன் - ஜஸ்டின் ஜோடி கலந்து கொண்டதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், நிகழ்ச்சியின் முதல் எபிசோடில், பிரியா ஜெர்சன் கண்கலங்கி பேசிய விஷயம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில், தங்களுடைய திருமண புகைப்படங்கள் திரையில் ஒளிபரப்பப்பட்ட தருணத்தில், பிரியா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். அப்போது அவர் பேசிய வார்த்தைகள் பலரின் மனதை கனமாக்கியது.

Super Singer Priya Jerson Zee Tamil

"நான் இவரை காதலித்து திருமணம் செய்தது எங்க அப்பா அம்மாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனாலும்... எங்க கல்யாணத்துக்கு அவங்க கண்டிப்பா வருவாங்கன்னு நான் கடைசி வரைக்கும் காத்திருந்தேன். என் வாழ்க்கையில ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் என் கல்யாணம்தான். ஆனா அந்த நாளுக்கு எங்க அப்பா அம்மா வரலைன்னு தெரிஞ்சப்போ, நான் முழுசா சந்தோஷப்படவே முடியலை," என்று கண்ணீரோடு பகிர்ந்துகொண்டார்.

மேலும் அவர் பேசும்போது, "இப்போ இந்த நிகழ்ச்சியில எங்க கல்யாண புகைப்படங்களை பார்க்கும்போது அந்த வருத்தம் மீண்டும் வருது. இந்த ஷோ எப்படியும் எங்க அப்பா அம்மா பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்களுக்கு ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன்... என்னுடைய புருஷன் ரொம்ப நல்லவர். பார்க்குறதுக்கு தான் கொஞ்சம் ரகடு மாதிரி இருப்பாரு, ஆனா மனசு முழுக்க குழந்தை.

என்னுடைய மாமனார், மாமியார் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க. அவங்களால்தான் நாங்க இங்க வர முடிஞ்சது. இந்த நிகழ்ச்சி முடியுறதுக்குள்ள, எங்க அப்பா அம்மாவும் எங்களோட சேரணும்னு தான் என் பெரிய ஆசை... என் கனவு, என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிரியா ஜெர்சனின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, பல ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. "உண்மையான காதல் இதுதான்", "பெற்றோர்கள் மனம் மாற வேண்டும்", "இந்த நிகழ்ச்சியாவது அவர்களை சேர்த்து வைக்கும்" என்றெல்லாம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

ஒரு பக்கம் இசை மேடையில் வெற்றி, இன்னொரு பக்கம் வாழ்க்கையில் போராட்டம்... அந்த இரண்டு உலகங்களையும் சமநிலைப்படுத்தி பயணிக்கும் பிரியா ஜெர்சனுக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்

"கில்லாடி ஜோடி" நிகழ்ச்சி, பிரியா ஜெர்சனின் அந்த ஒரு ஆசையை - பெற்றோரின் அன்பை - மீண்டும் அவரிடம் சேர்த்து வைக்குமா என்பதே, இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+