சூப்பர் சிங்கரில் ஜெயித்த வீடு, ஒரு வருஷம் ஆகியும் கைக்கு வரல.. வரி கட்ட முடியாம..! அருணா வேதனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற அருணாவிற்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்த பிறகும் அந்த வீட்டிற்கு தான் இன்னும் குடிப்பெயரவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் அருணா பேசியிருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அவர் அதில் கூறி இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் புதிது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் தொடங்குவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கும் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் அமோக வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பலர் இப்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்பதாவது சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற அருணாவும் ஒருவர்.
சூப்பர் சிங்கரில் ஒன்பதாவது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அருணா செலக்ட் ஆனார். அவரை தொடர்ந்து பிரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதுவரைக்கும் 8 சீசன்களாக ஆண்கள் மட்டுமே சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக இருந்த நிலையில் ஒன்பதாவது சீசனில் தான் ஒரு பெண் போட்டியாளராக அருணா வெற்றி பெற்று இருந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அருணா பேசும் போது நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தந்த வீட்டிற்கு இன்னும் போகவில்லை. பொதுவாக பெரிய மனசு பண்ணி ஒரு கிப்ட் ஒருத்தங்க தராங்கன்னா அதற்கும் சில வரிகள் கட்ட வேண்டியது இருக்கு.
எனக்கு சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதற்காக 50 லட்சத்திற்கு மேலே மதிப்புள்ள ஒரு வீடு தந்தாங்க. அதற்கு நாங்களும் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டியது இருந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையால் என்னால் அந்த பணத்தை முழுமையாக கட்ட முடியாது.
அதனால் இப்ப வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். விரைவில் மொத்த பணத்தையும் கட்டி முடித்ததும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவோம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுகிறோம் என்று பர்மிஷன் வாங்கி இருக்கிறோம் என்று அருணா கூறி இருக்கிறார்.
ஆனால் 60 லட்சம் வீட்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கு மேலாக டேக்ஸ் கட்ட வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளில் வீடு பரிசு கொடுக்கும் நபர்கள் எளிதாக போட்டியாளர்களுக்கு சென்றடையும் வகையில் கொடுத்தால் இது போன்ற சிக்கல்கள் அவர்களுக்கும் வராது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
சமீபத்தில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷுக்கும் ஐந்து கோடி பரிசு கொடுக்கப்பட்ட நிலையில் அதிலும் குறிப்பிட்ட பணம் பிடித்துக் கொண்டு தான் குகேஷுக்கு கொடுக்கப்படும். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அருணா பாடல் நிகழ்ச்சிக்கு பாட போயிருந்த இடத்தில் அவரிடம் நீங்கள் என்ன ஜாதி என்று சிலர் கேட்டது குறித்து வேதனையோடு அருணா பேசியதும் சில மாதங்களுக்கு முன்பு வைரல் ஆகி வந்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அருணா பல சினிமா பாடல்கள் பாடியிருந்தாலும் அவர் கோவில்களில் பக்தி பாடல்கள் பாடுவது தான் தனக்கு ரொம்பவும் பிடித்தது என்று பாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications