Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்மான் கானை விரட்டும் கடமான்.. குண்டு துளைக்காத பால்கனியில் உச்ச நடிகர்.. சென்ட்டிமென்ட் பிரேஸ்லெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், அளவுக்கு மீறின மரண பயத்தில் உள்ளதாகவும், சீக்கியர்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும்கூட, அவர்கள் அதற்கு பிறகு அமைதியாகிவிடுவார்களா? என்ற குழப்பம் சல்மானுக்கு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Cheyyaaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "இந்திய சினிமா நட்சத்திரங்களிலேயே உச்சபட்ச பாதுகாப்பு சல்மான் கானுக்கு தரப்பட்டுள்ளது.. 24 மணி நேரமும் அவரது வீட்டை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது..

television salman khan

இதுபோக, அவரே சொந்தமாக, தனியார் ஆட்களை பாதுகாப்புக்காக நியமித்துள்ளார். குண்டு துளைக்காத பால்கனி தயார் செய்யப்பட்டுள்ளது.. வீட்டுக்குள்ளேயே அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், தனியார் பாதுகாப்புக்கு மட்டும் , செலவு மாதம் 3 கோடி ரூபாய் ஆகிறதாம்.

பண்ணை வீடு: இதற்கெல்லாம் காரணம், ஒருமுறை மும்பையில் புறநகர் பண்ணை வீட்டுக்கு சல்மான் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியிருக்கிறார்கள்.. அந்த 6 பேரையும் யாரென்று கண்டுபிடித்தபோதுதான், செய்ய சர்வதேச கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரின் பெயர் அடிபடுகிறது.. அன்று சல்மான் கான் மானை சுட்ட விவகாரம்தான் இதற்கெல்லாம் பின்னணி என்று கூறப்படுகிறது..

சீக்கிய மதத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர்களது சீக்கிய மதத்தில் தெய்வமாக வணங்கக்கூடியது கடமாடு.. இந்த கடமாடுகள், மாடு போன்ற அளவில் காணப்படும்.. இது சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ளது.. முதுமலையிலும் காணலாம்.. இந்த கடமாடுகளை சிறுத்தையாலும்கூட, அடிக்கவே முடியாது.

மன்னிப்பு: "நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடிய மானை சல்மான் சுட்டுவிட்டார், அவரை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க சொன்னால், கேட்கவில்லை.. அதனால், அவரை சுட்டு, அவரது ரத்தத்தை கொண்டுபோய், அந்த மானின் மீது தெளித்தால்தான் எங்களுக்கு மனசு ஆறும்.. அவரை கொல்லாமல் விடமாட்டோம்" என்கிறார்.

இதனால்தான் சல்மான் கானும் உச்சக்கட்ட பயத்தில், ஆங்காங்கே பதுங்கியிருக்கிறார்.. இப்படித்தான், நடிகர் சுஷாந்த்துக்கும் கடுமையான மிரட்டல் வந்தது.. இதனால் பயந்துபோன சுஷாந்த், தன்னுடைய நண்பர்களிடம் இதை சொல்லி கலங்கியிருக்கிறார். தன்னுடைய வீட்டுக்குகூட போக பயந்தார். அதனால், ஆம்னி வேனிலேயே 4 நாட்களாக கிடந்தார்..

சுஷாந்த் நிலைமை: முகத்தை மறைத்து கொண்டு நகருக்கு வெளியே சென்று, பொதுக்கழிப்பிடங்களில், குளித்துவிட்டு, மறுபடியும் இந்த வேனில் வந்து பதுங்கி கொண்டார். கிட்டத்தட்ட இந்த நிலைமைக்குதான் சல்மான் கானும் வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

தன்னுடைய கையில் பிரேஸ்லெட் ஒன்றை போட்டுள்ளார் சல்மான்கான்.. இதை அவரது அப்பா, சல்மானுக்கு அணிவித்தாராம்.. இது கையில் கட்டியிருக்கும்வரை, உனக்கு எதுவுமே ஆகாது என்று சல்மானின் அப்பா சொன்னாராம்.. இந்த பிரேஸ்லெட், மும்பை மார்க்கெட்டில் "சல்மான்கான் பிரேஸ்லெட்" என்றே விற்கப்படுகிறது. ப்ளூ கலரில், வைரக்கல் பதிக்கப்பட்டு, வெள்ளியிலான இந்த பிரேஸ்லெட் விலை ரூ.8000..

பிரேஸ்லெட்: இப்படி அப்பா தந்த பிரேஸ்லெட் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறதாம்.. அதேசமயம், சீக்கியர்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும், அவர்கள் அதற்கு பிறகு அமைதியாகிவிடுவார்களா? என்ற குழப்பமும் சல்மானுக்கு உள்ளதாம். அதனால், உச்சபட்ச பயத்தில் சல்மான்கான் உள்ளதாக சொல்கிறார்கள்" என்றெல்லாம் செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+