சவுண்டு சரோஜா வர்றாங்களா? ஐஸ்வர்யா பேரை சொன்னதுமே.. இது பிக் பாஸ் வீட்டின் லிஸ்ட்.. பிக்பாஸ் சீசன் 8
சென்னை: பிக்பாஸ் சீசன் 8 விரைவில் இன்னும் 2 நாளில் துவங்க உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் இன்னமும் உறுதியாகவில்லை.. ஆனால், திடீரென 14 பேர் அடங்கிய பட்டியல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ஆர்வத்தை கூட்டி வருகிறது.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக போகிறது என்றாலே, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுவது வழக்கமாகும்.. அதனால்தான், நிகழ்ச்சி துவங்குவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே சோஷியல் மீடியாவில் போட்டியாளர்கள் குறித்த அரசல் புரசலான தகவல்கள் கசிய துவங்கும்.

யூகங்கள்: அதுபோலவே இப்போதும் போட்டியாளர்கள் குறித்த அனுமானங்களும், யூகங்களும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தினம் தினம் ஒரு லிஸ்ட் வெளியாகி கொண்டிருப்பதால், யார்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்ற குழப்பம் இன்னமும் நீடித்து கொண்டே வருகிறது.
ஆனால், குக் வித் கோமாளி பிரபலங்கள், இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க போவதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.. குறிப்பாக, தர்ஷா குப்தா, விஜே விஷால், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா, சோயா, டிடிஎஃப் வாசன், அன்ஷிதா, அர்ணவ், கார்த்திக் குமார் போன்றோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாம்.
லிஸ்ட் வந்தது: எனினும் நேற்று முன்தினம் இன்னொரு லிஸ்ட் வெளியாகியிருந்தது. அதில், தர்ஷிகா, டி.எஸ். கே, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், கோகுல்நாத், சீரியல் நடிகர் விஜே விஷால், விடிவி கணேஷ், பாடகி பால் தபா, சௌந்தர்யா நஞ்சுண்டன், சீரியல் நடிகை தர்ஷா குப்தா, சுனிதா, சஞ்சனா, அன்ஷிதா, அர்னவ் ஆகியோர் அடங்கிய பட்டியல் வெளியாகியிருந்தது.
இப்போது இதுதான் அந்த 14போட்டியாளர்கள் என்று கூறி மற்றொரு லிஸ்ட் இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது.. அதில், நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், கோகுல்நாத் , விடிவி கணேஷ், அன்ஷிதா, விஜே விஷால், அன்பு, டி.எஸ்.கே, தர்ஷிகா, சுனிதா, சாச்னா, பால் டப்பா, தர்ஷா குப்தா, அர்னவ் போன்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்களாம்.
ஐஸ்வர்யா: சினிமா மற்றும் சீனியர் நடிகையான லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா பாஸ்கரன்தான், இந்த லிஸ்ட்டில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இவரது சமையல் வீடியோவாகட்டும், யூடியூப் பேட்டிகளாகட்டும், அனைத்துமே வைரலாகிவிடும். கலகல மற்றும் துணிச்சலான பேச்சுக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.. எனினும், இப்போதைக்கு கைவசம் படங்களும் இல்லாத நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் பிக்பாஸ் வீட்டுக்குள் ஐஸ்வர்யாவும் வருவதாக தெரிகிறது.
ஆறு படத்தில் மக்கள் கழகத்தின் பிரச்சார பீரங்கியாக மாறி ரசிகர்களை ஈர்த்தவர் ஐஸ்வர்யா.. எனவே, சவுண்டு சரோஜா கேரக்டர் பேசிய வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து, வெல்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா உள்ளே வந்துவிட்டால், கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.
அனுமானங்கள்: ஆனால், இந்த லிஸ்ட்டும் உறுதியானதா? என்று தெரியவில்லை.. எப்படியும் பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவதற்கு, 2 நாட்களுக்கு முன்புதான், போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதால், இதுபோன்ற அனுமானங்கள் இன்னும் 2 நாளைக்கு இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள்..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications