சின்ன தல ரெய்னா பாடிய சூர்யா பாட்டு.. வாழ்க்கையில் யாரும் இப்படி கேட்டிருக்க முடியாது.. சேப்பாக்கமே அதிர்ந்து போச்சு
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாறியுள்ளது. பழைய வீரர்கள், புதிய அணியினர், இசை நிகழ்ச்சிகள் என முழுக்க கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களை கவர்ந்த பல சுவாரஸ்ய தருணங்கள் உருவாகின.
அதில் முக்கியமாக, சுரேஷ் ரெய்னா மற்றும் மணிமேகலை இடையே நடந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை - ரெய்னா கலாட்டா பேட்டி
நிகழ்ச்சியின் ஓரமாக நடந்த இந்த பேட்டியில், மணிமேகலை ரெய்னாவிடம் ஒரு கேள்வி ஒன்றை எழுப்பினார். "உங்களுக்கு பிடித்த பாடல் என்ன?" என்ற கேள்விக்கு, யாரும் எதிர்பார்க்காத பதிலை ரெய்னா அளித்தார்.
"எனக்கு 'முன்பே வா' பாடல் ரொம்ப பிடிக்கும்" என்று அவர் கூறியதுடன், தமிழ் சினிமாவை மீதான தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இந்த பாடல் சூர்யா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மணிமேகலை சிரிப்புடன், "நீங்க லவபிள் பர்சனா? ரொமான்ஸ் ரொம்ப பிடிக்குமா?" என்று கேள்வியை சற்று கலாய்த்து கேட்டார். அதற்கு ரெய்னா மிக எளிமையாக, "எனக்கு சூர்யா சார் ரொம்ப பிடிக்கும். அதனால தான் அந்த பாடல் பிடிக்கும்" என்று பதிலளித்தார்.
அதன்பின், அந்த பாடலை அவர் தானே பாட முயற்சித்தார். தமிழ் மொழி சரியாக வராததால், தப்புத்தப்பாக பாடிய ரெய்னாவை பார்த்து மணிமேகலை சிரித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்களும் அந்த தருணத்தை ரசித்தனர்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த நிகழ்வை மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"Suresh Raina the Singer... Our Chinna Thala sings his favourite song... Still feels unreal... Once in a lifetime moment..." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது. "ரெய்னா தமிழ் பாடல் பாடுறது செம", "சின்ன தல ரொம்ப சிம்பிள்" போன்ற கருத்துகள் ரசிகர்களிடமிருந்து பெருமளவில் வந்துகொண்டிருக்கின்றன.
ரசிகர்களை கவர்ந்த தருணம்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், தனது பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். அவர் எம்.எஸ். தோனி குறித்து பேசும்போது, "தோனி சேப்பாக்கத்தில் களமிறங்கினால், 25 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஈசிஆர் கூட அதிரும். அது தான் மாஸ்" என்று கூறியுள்ளார்.
மேலும், "ஐபிஎல் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, ஒரு பொழுதுபோக்கு. ஆனால் சிஎஸ்கே என்பது ரசிகர்களுக்கு ஒரு உணர்வு" என்று அவர் கூறியதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தோனியின் எளிமையான பதில்
இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி தனது எதிர்காலத்தைப் பற்றியும் சுருக்கமாக பேசியுள்ளார். "இது கடைசி சீசனா?" என்ற கேள்விக்கு முன்பு அவர் கூறிய "Definitely Not" என்ற பதிலை ரசிகர்கள் இன்னும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிப் பேசும்போது, "அதற்கு ஃபிட்னஸ் முக்கியம். வயது அதிகரிக்கிறது. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு விழா... பல நினைவுகள்
இந்த சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சி, ஒரு சாதாரண விழா அல்லாமல், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
ஒருபுறம் தோனியின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு, மற்றொரு புறம் ரெய்னா போன்ற வீரர்களின் எளிமை, அதற்கிடையில் மணிமேகலை போன்ற பிரபலங்களின் கலாட்டா பேட்டி - இவை அனைத்தும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கியுள்ளன.
மொத்தத்தில், இந்த விழா மீண்டும் ஒரு முறை "சிஎஸ்கே என்பது ஒரு கிரிக்கெட் அணி மட்டுமல்ல, அது ஒரு உணர்வு" என்பதை ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications