ஹிந்தி பிக்பாஸில் இதுதான் நடக்கிறது! நான் பார்த்ததும் அழுதுட்டேன்! ஸ்ருதிகா கணவர் எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் போட்டியாளராக தமிழ் நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய கணவர் அர்ஜுன், ஹிந்தி பிக் பாஸில் என்ன நடக்கிறது என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடங்கிய அதே அக்டோபர் 6ம் தேதி தான் ஹிந்தியில் பிக் பாஸ் 18 வது சீசன் தொடங்கப்பட்டது. அதில் தமிழ் நடிகையாக பலருக்கும் பரீட்சையமான ஸ்ருதிகா அர்ஜுன் கலந்து கொண்டார். இதுவரைக்கும் ஹிந்தி பிக் பாஸில் தமிழ் நடிகை யாருமே கலந்து கொண்டது கிடையாது.

முதல் முறையாக ஸ்ருதிகா அங்கு கலந்து கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் புதியதில் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் அதிகமான விமர்சனங்கள் எழுந்தது. அவரை கேமரா போக்கஸ் பண்ண வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து கொண்டிருக்கிறார், அவர் பொய்யானவர் என்றெல்லாம் கூட பலர் கூறி வந்தார்கள்.
ஆனால் போகப் போக அவரை புரிந்து கொண்டார்கள். எப்போதும் ஜாலியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா அல்லது உடைந்து பேசியதை பார்த்ததும் பீல் பண்ணி வந்தனர். அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கடந்த வாரத்தில் தமிழில் போலவும் ஹிந்தியிலும் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது.
அதில் ஸ்ருதிகாவின் சார்பாக அவருடைய தம்பி, கணவர், மகன் மூன்று பேரும் கலந்து கொண்டனர். தன்னுடைய மகனை பார்த்ததும் கதறி அழுத ஸ்ருதிகா மகனை தரையில் படுக்க சொல்லி அவளை கட்டி பிடித்துக் கொண்டார். பிறகு வயிற்றில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
குழந்தையை குழந்தையாக மாறி ஸ்ருதிகா கொஞ்சிக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து கணவரை பார்த்ததும் ஓடி சென்று அவருடைய இடுப்பில் அமர்ந்து கொண்டார். தன்னுடைய கணவரை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறி வந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஸ்ருதிகா தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ருதிகாவின் கணவர் தற்போது பேட்டி ஒன்றில் பேசுகிறார். அதில் அவர் பேசுகையில், ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸ்க்கு போறேன்னு சொல்லும்போது நாங்க எல்லோரும் ரொம்ப யோசிச்சோம். ஏன்னா அங்க வரவங்க எல்லாருமே ஒரு செலிபிரிட்டியாக இருப்பாங்க. அதனால ஹிந்தி ரசிகர்களுக்கு தெரிஞ்சவங்களா இருப்பாங்க.
ஆனால் ஸ்ருதிகா தமிழ் பொண்ணு, அங்க போறாங்கன்னு வரும்போது அங்க யாருக்குமே தெரியாது என்பதால் நாங்கள் ரொம்ப யோசிச்சோம். ஆனால் ஸ்ருதிகா நான் அங்க இருக்கிற வரைக்கும் இருக்கிறேன் மக்கள் ஓட்டு போட்டு பாத்துக்குவாங்க என்று உறுதியா இருந்தாங்க. அதுபோல நான் இதுவரைக்கும் இவ்வளவு நாட்கள் பிரிந்து இருந்தது கிடையாது. அதனால முதலில் அழுதுட்டேன்.
அப்புறம் சரி டிவியில் தினமும் பார்த்துக்கலாம் என்று மனதை திடபடுத்திக் கொண்டேன். ஆனால் ஸ்ருதிகா பிக் பாஸ் வீட்டில் ஒரு முறை ஸ்ட்ரெஸ் ஆகி நான் வீட்டுக்கு போறேன்னு அழுததை பார்த்து என்னால பார்க்கவே முடியல. நானும் ஸ்ருதிகா அழுது முதல் முறையாக இவ்வளவு பீல் பண்ணி நான் பார்த்தேன்.
அதுபோல ஆரம்பத்தில் ஸ்ருதிகா பொய்யா நடிக்கிறார் என்று சிலர் சொன்னாங்க. அப்போ எனக்கு உங்களுக்கெல்லாம் என்னடா தெரியும் அப்படின்னு தோனிச்சு.. அதுபோல கிட்டத்தட்ட 80 நாட்களில் கடந்து இப்போ பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்ருதிகா இருந்துட்டு இருக்காங்க. மூணு வாரம் போனாலே பினாலே வந்துரும். இவங்க அந்த வீட்டில் இதுவரைக்கும் இருந்ததே பெரிய விஷயம் என்று எமேஷனலாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications