Deva brother Sabesh: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் காலமானார்! சோகத்தில் இசை உலகம்!
கூறப்படும்சென்னை: இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேசன் (சபேஷ்) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று மதியம் 12.15 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 68.
சகோதரர் முரளி உடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் திரைப்படங்களுக்கு சபேஷ் இசையமைத்து வந்தார். சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா எனும் மகள்களும் கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது.
சபேஷின் இறுதி சடங்குகள் அவரது இல்லமான எண், 151, 18வது தெரு, சவுத்ரி நகர், வளசரவாக்கம், சென்னை என்ற முகவரியில் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு நடைபெற்று, பின்னர் அவரது உடல் பிருந்தாவனம் நகர் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படும்.
{image-deva4-1761205880.jpg tamil.oneindia.com
சபேஷ்-முரளி: இணைந்த இசைக் கூட்டணி
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்களான சபேஷ் - முரளி இருவரும் இணைந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். சபேஷ் - முரளி கூட்டணி இணைந்து, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, மாண்புமிகு குடும்பத்தார் உள்ளிட்டப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரு இணை இசையமைப்பாளர்களாகவும், தேவாவின் இசைப் பயணத்தில் பின்னணியிலும் இவர்கள் அளித்த பங்களிப்பு மறக்க முடியாதது.
கடந்த 21ஆம் தேதி உடல் நிலை குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபேஷ் இன்று காலமாகி இருக்கிறார். இதனால் தேவாவின் இசை கச்சேரிகளும் நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
கண்ணீரில் தேனிசைத் தென்றல்!
சபேஷின் மறைவு, இசையமைப்பாளர் தேவாவுக்குத் தாங்க முடியாதத் தனிப்பட்ட இழப்பாகும். இசை உலகத்தில் அவர் தனியாக வளர்ந்தாலும், அவருடைய குடும்பம் எப்போதும் அவருக்குப் பலமாக இருந்தது. குறிப்பாக, உடன் பிறந்த சகோதரர்கள் இருவரும் இசையில் அவருடன் பயணித்தவர்கள்.
சபேஷின் மறைவுச் செய்தி வெளியான நிலையில், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தேவாவின் குடும்பத்திற்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சபேஷின் இசைப் பங்களிப்பும், சகோதரப் பாசமும் என்றும் நினைவு கூறப்படும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications