தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்.. பரிசுத்தொகை இவ்வளவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி நேற்று சுதந்திர ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று முடிவுக்கு வந்திருக்கிறது.
பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த இந்த நிகழ்ச்சியின் டைட்டில் யார் ஜெயித்தார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அத்தோடு இந்த நிகழ்ச்சி கடந்து வந்த பாதை குறித்தும் இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் குறித்தும் பார்க்கலாம்.
தமிழ்நாட்டு மக்களின் இடையே தமிழின் பெருமையை பேசும் வகையில் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற தலைப்பில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா சம்பத் தொகுத்து வழங்கி வந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முடிவடைந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டது. அதற்கான ப்ரோமோவை தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களே தமிழ் குறித்த பெருமைகளை பேசி துவங்கி வைத்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்குள் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழின் பெருமை குறித்து அதிகமான பிரபலங்களும் போட்டியாளர்களும் உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அருண் பிரிட்டோ, கார்த்திக் ராஜ், ராகவேந்திரன் மற்றும் நாராயணன், கோவிந்தன் ஆகிய ஐந்து பேரும் இறுதி சுற்றிற்கு தேர்வாகி இருந்தனர்.

இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராகவேந்திரனும், ரன்னர் அப் ஆக பிரிட்டோவும் தேர்வாகி இருக்கிறார்கள். இதற்கு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் இரண்டாவது இடம் பிடித்த பிரிட்டோவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
அதில் ராகவேந்திரன் அதிகமாக பெண்கள் குறித்தும் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பெண்கள் பற்றி பேசுவதற்கு காரணம் என்னுடைய அம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்து போய்விட்டார். அவருடைய சார்பாக நான் பேசுகிறேன் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications