அர்ஜுன் பற்றி ஆதாரத்தோடு நிரூபித்த தமிழ்.. கோபத்தில் வெகுண்டெழுந்த ராகினி.. செம முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 10 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ராகினி அர்ஜுனுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும் கடைசி நேரத்தில் வந்து தமிழ் குடும்பத்தினர் அர்ஜுன் பற்றிய மொத்த உண்மைகளையும் உடைக்கின்றனர்.

 tamilum saraswathiyum serial November 10th promo and episode full update

அர்ஜுன் மற்றும் அர்ஜுன் குடும்பத்தின் சூழ்ச்சிகளை தெரிந்து கொண்ட ராகினி அதிரடியான முடிவு எடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் ரெஜிஸ்டர் ஆபீசில் அர்ஜுன் பெயருக்கு ராகினி சொத்தை மாற்ற கையெழுத்து போட்டுக் கொடுக்கும் கடைசி நேரத்தில் கோதை வந்து தடுத்து நிறுத்துகிறார். அதோடு கையெழுத்து போடுவதற்கு முன்பு இதை நீ தெரிந்து கொள் என்று சொல்கிறார்.

 tamilum saraswathiyum serial November 10th promo and episode full update

என்னவென்று ராகினி பார்க்க அங்கு அர்ஜுன் மீது ஸ்பேனரை தூக்கி போட்ட நபர் நிற்க்கிறார். அவர் என்னை அப்படி செய்ய சொன்னது தமிழ் கிடையாது. அர்ஜுனனின் மாமா பரமு தான் என்று அந்த நபர் சொல்ல அதை ராகினி நம்ப மறுக்கிறார். அதனால் தமிழ் தான் எப்படி இதை கண்டுபிடித்தேன் என்பதை பற்றி சொல்கிறார்.

அப்போது பொய் சொன்ன அந்த நபருடைய வீட்டில் தமிழும் நமச்சியும் அமர்ந்திருக்கும் போது அங்கு வந்த அந்த நபரிடம் அவருடைய மனைவி எதுக்காக இந்த கோதை அம்மா குடும்பத்துக்கு நீங்க இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனீங்க? நம்ம குழந்தை இன்னைக்கு உயிரோடு இருக்கிறதுக்கு காரணமே கோதை அம்மா தானே? அவங்க பையனுக்கு எதிரா இப்படி பொய் சொல்லி இருக்கீங்களே? உண்மையை போய் சொல்லுங்க.

 tamilum saraswathiyum serial November 10th promo and episode full update

இல்லனா குழந்தையை தூக்கிக்கிட்டு நான் பேருவேன் என்று அந்த நபரின் மனைவி மிரட்டியதால் தான் இப்போது வந்து உங்களிடம் உண்மையை சொல்கிறேன் சத்தியமா பேனரை தூக்கி அர்ஜுன் மேல போட சொன்னது பரமு தான் என்று அந்த நபர் சொல்ல, அதைக் கேட்டு ராகினி அதிர்ச்சியாக இருக்கிறார்.

அத்தோடு ஏற்கனவே சொத்துக்காக தமிழ் மீது உன் புருஷன் கொலை பலி போட்டவன் தானே. தன்னை கொலை செய்ய முயற்சி செய்தவன் என்று எப்படி நடிச்சான். அதை நம்பி தானே தமிழ்லை வீட்டை விட்டு வெளியே அனுப்புனோம். அப்ப கூட தமிழ் சொத்து எனக்கு வேணும்னு கேட்கலையே. சொத்துக்காக உன் புருஷன் எவ்வளவு தூரத்துக்கும் போவான்.

அது ஏற்கனவே புரிஞ்சது தான். அது போல தான் இப்போதும் பண்ணி இருக்கிறான் என்று கோதை திட்டுகிறார். இதைக் கேட்டு கோபமான ராகினி அர்ஜுனை பார்த்து உங்களை போய் இப்படி நம்புகிறேன். நீங்க இப்படி ஒரு துரோகத்தை செய்வீங்க என்று நான் நினைச்சு கூட பாக்கல. இனிமே எக்காரணத்தை கொண்டும் சொத்தை மாற்ற மாட்டேன்.

இதுதான் என்னுடைய கடைசி முடிவு என்று கூறி விடுகிறார். அதைத் தொடர்ந்து கோபித்துக் கொண்டு அங்கிருந்து ராகினி வீட்டுக்கு கிளம்பி போக நமச்சி யாருக்கோ இங்கே அடி வயிறு கருகுன மாதிரி இருக்கே என்று அர்ச்சுனை கிண்டல் செய்கிறார். அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ராகினி கடும் கோபத்தில் இருக்கிறார்.

அப்போது அர்ஜுன் அக்காவும், அம்மாவும் இருவரும் என்னாச்சு ஏன் இவ்வளவு கோபமாக இருக்கா சொத்தை மாத்தியாச்சா என்று கேட்க, உங்களுக்கு சொத்து மட்டும் தான் முக்கியமா? என்ன நடந்தது என்று உங்க மகன் கிட்ட கேளுங்க என்று கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து அங்கு அர்ஜுன் வந்து இறங்கியதும் தன்னுடைய மாமாவை அடித்து விலாசி எடுக்கிறார்.

அதை பார்த்து எல்லோரும் பதறி போய் என்ன ஆச்சு என விசாரிக்க அர்ஜுன் கம்பெனியில் ஒரு நபர் என் மேல ஸ்பேனரை தூக்கி போட்டு என்னை கொலை செய்ய முயற்சி செஞ்சேன்லா? அது செய்ய சொன்னது தமிழ் கிடையாதாம், இவரு தான்... ராகினி சொத்தை என் பேர்ல எழுதி வைக்கணும்ங்கிறதுக்காக இப்படி பண்ணி இருக்காரு என்று பழியை தூக்கி அர்ஜுனனின் மாமா மீது போடுகிறார்.

அதை தொடர்ந்து அர்ஜுனனின் மாமா பரமும் ராகினியிடம் தான் செய்தது தப்புதான் என்று மன்னிப்பு கேட்க அதற்கு அர்ஜுன் இனி நீங்க இந்த வீட்டில் இருக்க வேண்டாம் வீட்ட விட்டு வெளியே போங்க என்று விரட்டுகிறார். அதற்கு ராகினி இதுதான் லாஸ்ட் ஒன் இதுக்கு மேல இந்த மாதிரி நடந்துச்சுன்னா அவ்வளவுதான் என்று அவரை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அர்ஜுனிடமும் நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன்.

நீங்கதான் இந்த மாதிரி செய்ய சொன்னீங்கன்னு நினைச்சேன் என்று பேசுகிறார். அப்போதுதான் அர்ஜுன் பெருமூச்சு விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+