தமிழுக்காக குடும்பத்தோடு கோதை எடுத்த முடிவு.. ராகினிக்கு தெரியவரும் உண்மை.. வம்பு செய்யும் அர்ஜுன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் அக்டோபர் 12ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் தமிழுக்கு லோன் கிடைக்காததால் அதை வைத்து அர்ஜுன் தமிழை கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறார்.

tamilum saraswathiyum serial October 12th promo and episode full update

ஆனால் தமிழுக்கு அவருடைய தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழ் லோனுக்காக பேங்குக்கு போய் இருக்கும் நிலையில் அங்கு அவருக்கு லோன் கிடைக்காததால் அதை சொல்லி அர்ஜுன் தமிழை நக்கல் அடிக்கிறார். உங்களுக்கு வேணுமென்றால் நான் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்கோங்க என்று அவமானப்படுத்த, அதற்கு நமச்சி யார் பணத்தை யார் கொடுக்கிறது உங்களுக்கு திமிரா என்று திட்ட அதற்கு அர்ஜுனும் அவருடைய மாமாவும் நக்கலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது தமிழ் எனக்கு ஆதரவாக என்னுடைய குடும்பமும், எங்க அம்மாவும் கூட இருக்காங்க. அம்மா சொன்ன மாதிரி நான் இதிலிருந்து திரும்பி வருவேன். கம்பெனி சீக்கிரமா ஆரம்பிப்பேன் என்று அர்ஜுனிடம் சவால் விட்டு விட்டுப் போகிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு தமிழும் நமச்சியும் வருகிறார்கள். அப்போது தமிழ் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் அதற்கு தான் என்ன பண்ணனும்னு தெரியல என்று சொல்கிறார்.

tamilum saraswathiyum serial October 12th promo and episode full update

அதற்கு கோதை தொழிலாளர்களுக்கு கண்டிப்பா சம்பளம் கொடுத்திடனும் நம்முடைய முன்னேற்றத்திற்கு காரணமே அவங்க தான் என்று சொல்லி அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக தன்னுடைய நகைகளை கழட்டி கொடுக்கிறார். தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துவிட்டு தாலி செயினை கொடுக்கப் போகிறார். அப்போது அதை வேண்டாம் என்று தமிழ் தடுக்கிறார். வீட்டு மருமகள்களும் காதில் கழுத்தில் போட்டிருக்கும் அனைத்து நகைகளையும் கழட்டி கொடுக்கின்றனர்.

தமிழ் அதை வாங்க மனமில்லாமல் தவித்தாலும் வேறு வழியில்லாமல் அதை வாங்கிக்கொண்டு அதை அடகு வைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார். பிறகு தொழிலாளர்களிடம் இங்கே வேலை ஆரம்பிக்க கொஞ்ச நாள் ஆகும் அதுவரைக்கும் நீங்க வேறு எங்கேயாவது வேலை பாருங்கள் என்று சொல்ல அதற்கு தொழிலாளர்கள் அதெல்லாம் முடியாது. நாங்க உங்களுக்கு உறுதுணையா இங்கே தான் இருப்போம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அத்தோடு எங்களுடைய சம்பளப் பணத்தையும் நீங்களே திரும்ப எடுத்துக்கோங்க. கம்பெனி சரியானதும் எங்களுக்கு கொடுங்க என்று சொல்ல அதற்கு தமிழ் நாம ஆம்பளைங்க எப்படியும் சமாளிச்சிடுவோம். ஆனால் வீட்டில் பொம்பளைங்க தான் நிறைய கஷ்டங்களை சமாளிக்கிறாங்க. அவங்களுக்கு தான் பண தேவை அதிகமாக இருக்கும். வீட்டு செலவு அதிகமாக இருக்கும். அதனால கண்டிப்பா இந்த பணம் அவங்களுக்கு தேவைப்படும் என்று அவர்களை சமாதானப்படுத்துகிறார்.

அதை தொடர்ந்து ராகினி கோயிலுக்கு போகிறார். அங்கு கோதையும் தன்னுடைய இரண்டு மருமகள்களோடு வருகிறார். அப்போது அங்கு வரும் பெண்கள் கோதையிடம் நீங்க இந்த இக்கட்டான செய்த உதவிக்கு நன்றி என்று அவர் செய்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எப்போது நீங்க மகாலட்சுமி மாதிரி நிறைய நகை போட்டுருப்பீங்க. ஆனா இப்போ உங்க மருமகள்களும் மஞ்சள் கயிறு போட்டு இருக்காங்க என்று நினைக்கும் போது தான் கவலையாய் இருக்கு என்று சொல்ல, இதை எல்லாம் ராகினி கேட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+