தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி யார் தெரியுமா? நடிகர் கவினுக்கு காதலியா? லீக்கான ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை யார் என்பதை பற்றியும் அவர் எப்படி சீரியலுக்கு வந்தார் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையின் பெயர் அர்சிதா. இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் தேன்மொழி பி ஏ, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அதுபோல அர்சிதா மூன்று வயதில் இருந்தே சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் இவருக்கு நன்றாக பேச தெரிந்திருந்தாலும் இவர் மலையாளி தானாம். இவர் ஜனவரி 1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்திருக்கிறார். இவர் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய அப்பா இறந்து போய்விட்டாராம். அதனாலேயே அர்சிதா தனக்கு நடிப்புதான் கேரியர் என்று செலக்ட் பண்ணி இருக்கிறார்
ஆனால் அவருடைய அப்பா உயிரோடு இருக்கும்போது அர்சிதா நடிப்பில் இருக்கும் ஆர்வத்தை பார்த்து அடிக்கடி பாராட்டிக் கொண்டே இருப்பாராம் பிறகு அர்சிதா கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது ஒருவரை காதலித்திருக்கிறார். ஆனால் இவருடைய காதல் ஸ்ட்ராங்காக இருந்தாலும் அவருடைய காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாம். தன்னுடைய முதல் காதலை மறக்க முடியாத சோகத்தில் இருந்த அர்சிதாவிற்கு அந்த நேரத்தில் தான் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த சீரியலில் தான் நடிகர் கவினும் சிவா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சிவாவை காதலிக்கும் கேரக்டரில் அர்சிதா தான் நடித்திருந்தாராம். அந்த சீரியலில் கவின் காதலியாக நடித்த அர்சிதா தான் அதைத் தொடர்ந்து சன் டிவியில் சீரியலில் நடிக்க ஆரம்பிக்கிறார். அந்த வகையில் மகராசி, கல்யாண பரிசு போன்ற சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் இவருக்கு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தந்த வலி என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா சிக்சர் போன்ற படங்களிலும் அர்சிதா நடித்திருக்கிறார். அதோடு ஆதி நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படத்தில் அசிஸ்டன்ட் மேனேஜராகவும் நடிகை அர்சிதா தான் இருந்திருக்கிறார். அதுபோல அர்சிதாவிற்கு எல்லா நடிகைகளும் பிடிக்குமாம். அதனாலேயே அவர்களிடம் இருந்து அவர்களுடைய நல்ல குணங்களை எல்லாம் இவர் ஃபாலோ பண்ணி வருகிறாராம்.

என்ன நிலையில் தான் அர்சிதாவிற்கு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ராகினி வீட்டுக்கு செல்ல பெண்ணாக இருந்தாலும் அர்ஜுனை கண்மூடித்தனமாக காதலிப்பதை பார்த்து ரசிகர்கள் திட்டி வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஒவ்வொரு முறையும் அர்ஜுன் தப்பு பண்ணி இருக்கிறார் என்று தெரிந்த பிறகும் அர்ஜுனுக்காக சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் ராகினியை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். ஆனால் அது என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அர்சிதா அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications