Tamizha Tamizha: இந்த நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக்கூடாது.. தமிழா தமிழாவில் நடந்த சம்பவம்! இது பலருக்கும் பாடம்
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி, சமூகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை நேரடியாக மேடைக்கு கொண்டு வந்து விவாதிக்கச் செய்வதால் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் "கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் - கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம் அரங்கையே பரபரப்பாக்கியது.
இன்றைய வாழ்க்கை முறையில் உணவு பழக்கவழக்கங்கள் எவ்வளவு மாறிவிட்டன, ஆரோக்கியம் முக்கியமா? சுவை முக்கியமா? குழந்தைகளின் விருப்பமா? பெற்றோரின் கட்டுப்பாடா? என்ற பல கோணங்களில் விவாதம் நகர்ந்தது. அதில் குறிப்பாக ஒரு அப்பா மற்றும் அவரது மகளை மையமாகக் கொண்டு நடந்த விவாதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தந்தையின் தவிப்பு
அந்த குடும்பத்தில் தந்தை ஆரோக்கியமான உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்டுப்பாடு உள்ள அணியில் அமர்ந்திருந்தார். ஆனால் அவரது மகள் கட்டுப்பாடின்றி சாப்பிடும் அணியில் இருந்தது மேடையில் ஒரு சுவாரஸ்யமான சூழ்நிலையை உருவாக்கியது. இதைப் பார்த்ததும் அவருடைய பெண், "மகள் அங்கே இருக்கும்போது நீங்கள் இங்கே எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அந்த அப்பா பேசும்போது, தனது குழந்தை வாரத்திற்கு பல முறை நூடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்றவற்றை கேட்டால் வாங்கிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். இதிலிருந்து விவாதம் இன்னும் தீவிரமானது.
அதாவது ஆவுடையப்பன் அந்த நபரிடம் பொண்ணு கேட்கிறார் என்பதற்காக நீங்க ஆரோக்கியம் இல்லாததை சாப்பிட கொடுத்துடுவீங்களா என்று கேட்டதும், என்ன பண்ண சார் குழந்தைங்க இதை தான் விரும்புகிறார்கள் உங்க வீட்டிலயும் குழந்தை அடம்பிடிச்சு கேட்டா நீங்க வாங்கி கொடுக்கிறது இல்லையா? என்று வாயை விட்டு விட்டார்.
ஆவுடையப்பன் சவால்
இதற்கு தொகுப்பாளர் ஆவுடையப்பன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, "நான் இப்போவே என் வீட்டுக்கு போன் பண்ணி தரேன்... நீங்க என் பொண்ணு கிட்ட கேளுங்க... அவங்க இதுவரைக்கும் பிரைடு ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டிருக்காங்களா என்று..." என்று சவால் விடும் வகையில் பேசினார்.
அதற்கு எதிர் தரப்பில் இருந்தவர் "உங்க பொண்ணு சாப்பிட மாட்டாங்களா?" என்று மீண்டும் கேள்வி எழுப்பியதும், "நீங்க சவால் விடுற மாதிரி கேட்குறீங்க... நான் ரெடியா இருக்கேன்... எல்லாரும் அப்படித்தான் செய்வாங்க என்று பொதுவாக சொல்லாதீங்க" என்று ஆவுடையப்பன் கோபப்பட்டு இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் விவாதம்
இந்த பேச்சு தான் சோசியல் மீடியாவில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. சிலர், "விவாத நிகழ்ச்சியில் எல்லா விதமான கேள்விகளும் வரும்... அதற்கு நடுவர் அமைதியாக பதிலளிக்க வேண்டும்" என்று கூறுகின்றனர். மற்றொருபுறம், "எல்லா பெற்றோரும் ஒரே மாதிரி குழந்தைகளை வளர்ப்பார்கள் என்று நினைப்பது தவறு... ஆரோக்கியத்தில் கட்டுப்பாடு வைப்பவர்களும் இருக்கிறார்கள்" என்று தொகுப்பாளருக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
எதிர் எதிர் துருவங்கள்
மேடையில் இருந்த அந்த குடும்பத்தின் நிலைமையும் பலரின் கவனத்தை ஈர்த்தது. கணவர் டயட் மற்றும் கட்டுப்பாடு அணியில் இருந்தபோது, மனைவியும் மகளும் "எங்களுக்கு பிடித்ததை சாப்பிடுவோம்" என்ற அணியில் அமர்ந்திருந்தது குடும்பத்திலேயே உணவு பழக்கத்தில் இருக்கும் வேறுபாட்டை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் அவர்கள் "ஏன் வந்தோம்" என்ற நிலைக்கு சென்றது போல் இருந்தது.
மொத்தத்தில், இந்த வார நிகழ்ச்சி சாப்பாடு என்ற சாதாரண விஷயத்தை மட்டும் பேசவில்லை; பெற்றோர் - குழந்தைகள் உறவு, ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, வாழ்க்கை முறை, உணவில் கட்டுப்பாடு வைக்கும் மனநிலை ஆகிய பல விஷயங்களை திறந்தவெளியில் பேச வைத்தது. அதனால் தான் இந்த எபிசோடு சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications