தமிழா தமிழாவில் மாரிமுத்து மிரட்டல்.. ஜோதிடம் விஷயத்தில் நறுக்கென்று கேள்வி.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் எபிசொட்டில் விவாதம் நடைபெறுகிறது.
அதில் ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் நடக்கிறதில்லை என்ற அணியில் இருந்து நடிகர் மாரிமுத்து ஜோதிடர்களை பார்த்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அப்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர், முதலமைச்சர் ஆகவே முடியாது என்று பல ஜோதிடர்கள் சொன்னார்களே இப்போ அந்த ஜோதிடர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று மாரிமுத்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை போலவே தமிழா தமிழா நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கரு பழனியப்பன் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வந்தார். இப்போது அவர் விலகிய பிறகு அவருக்கு பதிலாக பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்த நிகழ்ச்சி புது பொலிவுடன் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொது மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் ஜோதிடத்தை நம்பாத பொது மக்கள் தரப்பிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் மாரிமுத்து கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வார எபிசோட்டுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு பெண் ஜோதிடர் சந்திராஷ்டமம் அன்னைக்கு செல்பி எடுத்து டெலிட் பன்னிரனும் என்று சொல்கிறார். அதற்கு ஆவுடையப்பன் என்ன காரணத்தினால் இதை செய்யணும் என்று கேட்க, அதற்கு இன்னொரு ஜோதிடர் உங்க முகத்தை எடுத்து நீங்களே அழிச்சிக்கிறீங்க என்கிற போது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனையை நீங்களே முடிச்சுக்கிறீங்க என்று அர்த்தம் என்று சொல்கிறார்.
அதற்கு நடிகர் மாரிமுத்து கோபம் வருது, அதே நேரத்துல சிரிப்பு வருது அடக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கேன் என்று சொல்ல, பொதுமக்கள் அணியில் இருப்பவர்கள் பலர் கைதட்டுகின்றனர். அப்போது ஜோதிடரில் இருந்த ஒருவர் நாங்க சொல்றது உங்களுக்கு நடக்கலனா ரெண்டு கோடி ரூபா சொத்து எழுதி தருகிறேன் என்று சொல்ல, அதற்கு நடிகர் மாரிமுத்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர், முதலமைச்சர் ஆகவே முடியாது அந்த பாக்கியம் அவருக்கு இல்லவே இல்லன்னு ஊர்ல இருக்க அத்தனை ஜோசியனும் சொன்னான். ஆனா இப்போ அவரு முதலமைச்சர் ஆயிட்டாரு. இப்போ மூஞ்சிய எங்க கொண்டு வைப்பாங்க என்று கேட்கிறார்.
அதற்கு சொத்து எழுதி தரேன் என்று சொன்ன ஜோசியர் நீங்க என்ன லாஜிக் பேசிக்கிட்டு இருக்கீங்க. நாங்க யார் தெரியுமா? என்று கத்தி பேச, அதற்கு மாரிமுத்து எந்த ஜோசியனாவது சென்னை வெள்ளத்தில் மூழ்கும் என்று சொன்னானா? கொரோனா வரும் என்று சொன்னானா? வந்ததுக்கு அப்புறம் 1008 சொல்லுவாங்க என்று கோபமாக பேசுகிறார்.
அதற்கு இன்னொரு ஜோதிடர் ஜோதிடம் சொல்பவர்கள் வழிகாட்டிகள், என்று பேசுகிறார். தற்போது இந்த ப்ரோமோ பரபரப்பாக வலம் வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக கெத்து காட்டிக் கொண்டிருக்கும் மாரிமுத்து இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியிலும் மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications