Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கையெழுத்தால் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.. கண்ணீரோடு பிரபலம்.. தமிழா தமிழாவில் நெருடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி புது பொலிவோடு ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் இந்த வாரம் வங்கிகளில் கடன் வாங்கி வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் என்ற தலைப்பில் விவாதம் செய்யப்பட்டது. அதில் ஒருவர் தான் தெரியாமல் போட்ட ஒரே ஒரு கையெழுத்தால் பட்ட அவலங்களை சொல்லி பலருக்கும் விழிப்புணர்வு கூறியிருக்கிறார்.

Tamizha Tamizha Show August 06 episode I got to the middle of the street with a signature

தற்போது சின்னத்திரையில் பல விவாத நிகழ்ச்சிகள் புதிது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் கரு பழனியப்பன் தொகுப்பாளராக இருந்தார். அவர் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் இப்போது பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் மூன்றாவது வார எபிசோட்டில் வங்கிகளில் கடன் வாங்கி வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் என்ற தலைப்பில் விவாதம் செய்யப்பட்டது. அப்போது பலர் தாங்கள் வங்கிகளால் வாழ்ந்தது பற்றியும், பலர் வங்கி கடன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு நபர் நான் ஒரே ஒரு கையெழுத்து தான் போட்டேன். அதோட என்னுடைய வாழ்க்கை அப்படியே முடிந்து விட்டது. நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கியதும் இல்லை. ஆனால் நான் செய்த ஒரே தவறு என்னுடைய நண்பனுக்காக வங்கிக்கு போனதுதான். அவன் கூப்பிட்டான் என்று நானும் போனேன். அங்கிருந்த மேனேஜர் அவராக தான் சொன்னார் நீங்க இதுல ஒரு கையெழுத்து போடுங்க. இது அத்தாட்சிக்கு தான் வேறு ஒன்றும் இல்லை என்று அவரே சொன்னார். நானும் எல்லாமே அதில் இங்கிலீஷில் இருந்ததால் ஒரு கையெழுத்து தானே என்று போட்டுவிட்டேன்.

பிறகு ஒரு வருடம் கழித்து தான் எனக்கு பிரச்சனை வர தொடங்கியது. 25 லட்சம் கடன் வாங்கிய நண்பர் ஒரே ஒரு ட்யூ கட்டி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் எதுவுமே கேட்கல. பொதுவா லோன் கொடுக்கும்போது அவருடைய தகுதி பார்த்து தானே லோன் கொடுத்து இருப்பாங்க. அப்போ சாட்சி கையெழுத்து போடுறவங்களோட தகுதியையும் பார்க்க வேண்டும் தானே.? ஆனா அப்படி எதுவுமே அவங்க பார்க்கல என்னை கையெழுத்து மட்டும் போட சொன்னாங்க நானும் போட்டுட்டேன்.

நீங்க எதுக்காக பேங்குக்கு வந்தீங்க என்று என்கிட்ட ஏதாவது அவங்க பேசி இருக்கணும் இல்ல..? ஆனா அந்த மேனேஜர் எதுவும் கேட்கல. இப்போ அந்த மேனேஜர் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊருக்கு போய்ட்டாரு. இரண்டு ஏக்கர் நிலத்தை வித்து 40 லட்சம் ரூபாய் கட்டி வழக்கறிஞர் வைத்து தான் அந்த அந்த கேசை முடித்து இருக்கேன். ஒரு கையெழுத்து போட்டதால இவ்வளவு வினை வந்துடுச்சு என்று பேசி இருக்கிறார்.

Tamizha Tamizha Show August 06 episode I got to the middle of the street with a signature

தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இது போன்ற பல அப்பாவிகள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் என்று அவர்களுக்காக பேப்பரில் என்ன எழுதி இருக்கிறது என்பதை படிக்காமல் கையெழுத்து போட்டு கொடுப்பதால் இது போல தான் ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்து நிற்கும் என்று பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது.

பொதுவாக வங்கிகளில் கண்களுக்கு தெரியாத வகையில் சின்ன எழுத்துக்களில் தங்களுடைய கண்டிஷன்கள் எல்லாம் பிரிண்ட் எடுத்து வச்சிட்டு வைத்திருக்கிறார்கள் அது பலருக்கும் புரிவதில்லை. புரிந்தாலும் அதை படிப்பதற்கு நேரம் தருவதும் இல்லை. அதனால் இந்த மாதிரி வங்கிகளில் சென்று யாரேனும் சொன்னார்கள் என்று கையெழுத்து போட்டு கொடுத்து விடாதீர்கள். தற்போது இந்த நபரின் கண்ணீர் பேட்டி பலருக்கு பாடமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+