Tere Ishq Mein box office: முதல் நாள் வசூலில் கலக்கும், தனுஷின் தேரே இஷ்க் மே! இத்தனை கோடியாமே!
சென்னை: இட்லி கடை படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான தேரே இஷ்க் மே திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் ரசிகர்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் நேற்று முதல் நாள் இந்த படம் கோடி கணக்கில் வசூல் செய்து இருக்கிறதாம். அது பற்றி விரிவாக பார்ப்போமா?
தனுஷ் இப்பல்லாம் தமிழ் படத்துல மட்டும் இல்லாம கிடைக்கிற கேப்பில் ஹிந்தி படங்களிலும் நடிச்சிட்டு வராரு. அதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான அட்ரங்கீரே என்கிற படத்தின் மூலமா தான் பாலிவுட்ல அறிமுகமானார். அந்த படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கி இருந்தார். அதற்குப் பிறகு அவருடைய இயக்கத்திலேயே ரஞ்சனா என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

ரஞ்சனா படமும் வெற்றியை கொடுக்க அதைத்தொடர்ந்து சமிதாப் என்கிற படத்தில் நடித்திருந்தார். தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான போது அவரால் அங்கு ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் சொல்லி கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர் நடித்த படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி வரை வசூல் செய்து பான் இந்தியா நடிகராகவும் தனுஷ் மாறிவிட்டார்.
இப்போ மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று நவம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தமிழில் மட்டும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை.
மும்பையில் மட்டுமே ப்ரமோஷன் விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தனுஷ் கலந்து கொண்டிருந்தார். அதனால் தமிழில் இந்த படம் தெரியாததால் பெரிதாக ரசிகர்களும் ஆர்வம் காட்டவில்லை. நேற்று பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான நிலையில் இந்த படம் நேற்று தமிழகத்தில் வெறும் 80 லட்சம் மட்டும்தான் வசூல் செய்து இருக்கிறதாம். ஆனால் வட இந்தியாவில் மட்டும் 15 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏன் எவர் இந்த படத்தை மட்டும் தமிழில் ப்ரோமோஷன் செய்யல என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இட்லி கடை படத்திற்கு ஓவர் பிரமோஷன் செய்தும் கடைசியில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்பதால் குறைத்துக் கொள்வோம் என்று தனுஷ் முடிவெடுத்துட்டாரா? என்றும் கேள்விகள் வருகிறது.












Click it and Unblock the Notifications