முதல்வருக்கு அரோகராவா? விஜய்க்கு தூக்கமே போச்சு! பக்கவிளைவாக மாறக்கூடாது! தாடி பாலாஜி கலாய்ப்பு
சென்னை: தமிழக அரசியல் களத்தில் இப்போது பேசு பொருளாகி இருக்கும் ஒரு விஷயத்தை நடிகர் தாடி பாலாஜி தனது பணியில் கிண்டலாகவே விமர்சித்து இருக்கிறார். அதுவும் நேரடியாக யாருடைய பெயரையும் சொல்லாமல், "ஒருத்தருக்கு தூக்கம் போச்சு, நிம்மதி போச்சு, டென்ஷன் அதிகமாயிடுச்சு. அது வேற யாரும் இல்ல, நம்ம தமிழக முதல்வர் தான்" என்று அவர் பேசியிருக்கும் வீடியோ கவனம் பெற்று வருகிறது. அதோடு "உங்களால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர, பக்க விளைவாக மாறக்கூடாது" என்றும் எச்சரித்து இருக்கிறார்.

தாடி பாலாஜி வீடியோ
கடைசியில், "இதுல வேற அரோகரா" என்று அவர் கிண்டலாக சொல்லி இருப்பதுதான் இந்த வீடியோவின் ஹைலைட். தாடி பாலாஜி எதை சுட்டிக்காட்டி பேசுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதன் பின்னணியில் சமீபத்தில் திருச்செந்தூர் சூரசம்கார விழாவில் ஏற்பட்ட அரோகரா சர்ச்சை இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. முதல்வருக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர்கள் அவருக்கே புதிய சர்ச்சையை உருவாக்கிவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் வெளியிட்ட வீடியோவில் மையக்கருத்து.
திருச்செந்தூர் சூரசம்கார சம்பவம்
கடந்த நவம்பர் 15ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூராசம்கார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் விஜய்க்கும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கும் அரோகரா என்று முழக்கம் விடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முருகப்பெருமானை வழிபடும்போது பக்தர்கள் எழுப்பும் அரோகரா முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காக பயன்படுத்துவது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கோவில் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சியில் முழக்கம் இட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே இந்த நிகழ்ச்சியில் பாடி இருந்த குப்புசாமி தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
அதில், "முதல்வர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டு பாடப்படவில்லை, விஜய் முருகனிடம் வேண்டிக் கொண்டது போல மற்றவர்களும் வேண்டிக் கொண்டால் வெற்றி கிடைக்கும்" என்ற கருத்தில் தான் நான் பாடினேன் என்று புஷ்பவனம் குப்புசாமி சொல்லியிருந்தார். ஆனால் இந்த விளக்கம் வெளியான பிறகும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கோவில் வழிபாட்டு மரபில் அரசியல் புகழ்ச்சிக்கு இடம் இருக்கக் கூடாது என்ற விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பாடலின் பொருளை முழுமையாக புரிந்து கொள்ளாமல் விமர்சிக்க வேண்டாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த சூழலில் தான் தாடி பாலாஜியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. முதல்வரை பற்றி நேரடியாக நீண்ட அரசியல் விமர்சனம் செய்யாமல், அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் பக்கம் பலமாக இருக்க வேண்டுமே தவிர பக்கவிளைவாக மாறிவிடக்கூடாது என்று சொல்லி இருப்பது கவனம் பெறுகிறது. பொதுவாக அரசியலில் ஒருவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் அளவுக்கு மீறிய புகழ்ச்சி, தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
