சின்ன மருமகள் சீரியல் நடிகையால் வந்த வினை.. புருஷனோட என் வீட்டில் 10 நாள்! பிக் பாஸ் தாமரை செல்வி ஆதங்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை தாமரை செல்வி தற்போது வெளியிட்டுள்ள வீடியோக்களும், பேட்டியும் சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கண்ணீருடன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், தன்னை நம்ப வைத்து நகை மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். அந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், தற்போது ஒரு தனியார் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டி இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

சீரியல் உறவு
அந்த பேட்டியில் தாமரை செல்வி கூறியதாவது, சின்ன மருமகள் சீரியல் ஷூட்டிங்கில் தான் நடிகை ஸ்வேதாவுடன் நெருக்கமாக பழகியதாக தெரிவித்துள்ளார். "அந்த சீரியலில் அவள் என்னை 'அம்மா' என்று கூப்பிடுவாள். நாங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையிலேயே அம்மா-மகள் போல இருந்தோம். அந்த அளவுக்கு நெருக்கம் இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
வீட்டிலேயே தங்க வைத்தேன்
அந்த நடிகை திடீரென திருமணம் கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் குடும்ப பிரச்சனையால் கணவருடன், தங்க இடமின்றி இருந்ததாக தாமரை செல்வி கூறுகிறார். 'எங்க போறதுன்னே தெரியல'ன்னு சொன்னா. அதனால் என் வீட்டிலேயே 10 நாள் தங்க வைத்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
பணம் வாங்கி சிக்கல்
இந்த நேரத்தில்தான் புதிய பிரச்சனை உருவானதாக அவர் கூறுகிறார். "தாமரை செல்வி வீட்டில் ஸ்வேதாவும் அவருடைய கணவரும் தங்கி இருந்த சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுவேதா பிரிந்து போய்விட்டதாகவும், அதற்குப் பிறகு அவருடைய கணவர் எனக்கு இப்போதைக்கு போக இடம் இல்ல அதனால இன்னும் சில நாட்கள் மட்டும் உங்க வீட்டுல இருந்துக்கிறேன் என்று கண்ணீருடன் கேட்டார் அதனால் நானும் சரி என்று சொல்லிவிட்டேன் என தாமரை செல்வி சொல்லி இருக்கிறார்.
பிறகு 'என் மனைவிக்கு ப்ரமோஷன் பண்ணுறேன்'ன்னு சொல்லி சில பேரிடமிருந்து பணம் வாங்கியிருக்கா. ஆனா அது நடக்கல. அதனால் பணம் கொடுத்தவர்கள் எல்லாம் வந்து மிரட்டுறாங்க அதனால கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று கேட்டான் அதற்காக நானும் பணம் எல்லாம் கொடுத்தேன்.
ஏமாற்று வேலை
"சில இடங்களில் இருந்து எனக்கு ஸ்கேனர் அனுப்பி 'பணம் போட்டு விடுங்க'ன்னு கேட்டான். பாவம்னு நினைச்சு நானும் பலமுறை பணம் அனுப்பினேன்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் இறுதியில் தன்னையே பாதித்துவிட்டதாக தாமரை செல்வி கூறுகிறார்.
"கடைசில என்னைதான் ஏமாத்திட்டான். அந்த பையன் எனக்கு ஆப்பு வச்சுட்டான். இப்போ அந்த நடிகையும் என்கிட்ட பேச மாட்டா" என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையம் வரை சென்ற பிரச்சனை
இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய நகையை ஏமாற்றி விற்றதாக 'ஆதி' என்ற நபர் மீது குற்றச்சாட்டு வைத்து, தனது கணவர் பார்த்தசாரதி மூலம் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் தாமரை செல்வி கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications