Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Roja: "ரோஜா" படத்தில் "புது வெள்ளை மழை" பாடலில் உள்ள அமானுஷ்யம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ரோஜா" திரைப்படத்தில் "புது வெள்ளை மழை" பாடலில் உள்ள அமானுஷ்யம் என்ன என்பது தெரியுமா? காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, கடத்தல்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செல்வன் அன்பு கூறியிருப்பதாவது: இந்தியா மறக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தின் படம் என்றால் 'ரோஜா'வைச் சொல்லலாம்... Guns and roses in kashmir என்கிற சொல்லுக்கேற்ப காஷ்மீர், ரோஜா, துப்பாக்கி என பொருந்தக்கூடிய விஷயங்கள் யதார்த்தமாக அமைந்தது தான் சிறப்பு.

television roja ar Rahman

காஷ்மீர் மந்திரி முப்தி முகமது சயிது மகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மீட்கப்பட்டது முள்ளாக இருக்க, காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், கடத்தல்கள் இவைகளை வைத்து மணிரத்னம் எழுதிய திரைக்கதை பார்ப்பவர்களை நெருப்பால் சுட்டது நிஜம்.

காரணம், அதுவரை இந்தியனே இந்தியனை கடத்தியதாக காட்டப்பட்டதில்லை என்பதால்.

ரோஜாவை கண்ணை அடைத்து கூட்டிக் கொண்டு வரும் ரிஷி கண்ணிலிருந்து கையை விலக்க, ஓங்கி உயர்ந்த அந்த ஐஸ் மலையை கண்கள் விரிய, இதயம் பரவசத்தில் துடிப்பு எகிற அந்த அனுபவத்தை பின்னணி இசையாலேயே செவி முன் கொண்டு வந்திருப்பார் ரஹ்மான்...

புது வெள்ளை மழைப்பாட்டின் அமானுஷ்யம் அதன் தாளம் தான். மலைகளில் அந்தப்பாடல் எதிரொலிப்பது போலவே இசையும் இருக்கும். ஒரே மாதிரி படங்களை ரசித்துக் கொண்டிருந்த தமிழனின் கண்ணைக் கட்டி, தியேட்டருக்குள் சென்று கையை எடுத்து "இப்போது பெறு புதிய அனுபவம்...." என்கிறார் மணி.

ரோஜா என்கிற பெயரும், அதில் இருந்த மலரும், புதுமுகம் அர்விந்த்தும் இருந்த இப்படத்தை காதல் படமாக எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. அழகான காதல் கதை வித் த்ரில்லர்...

மெயின் தீம் காஷ்மீர் தீவிரவாதி கடத்துவது தான். அதுவரை கதையை நகர்த்த படாத பாடுபட்டு கொண்டு போவார்கள்.

சுந்தர பாண்டிய புரத்திலிருந்து சென்ற ரோஜா கணவனை மீட்டாள் என்பதற்கு ரோஜா பெரிதாக என்ன செய்தாள் என்று தெரியவில்லை. ஒரு முறை மந்திரியைப் பார்த்து விடாமல் தமிழில் பேசி பேசி அவரும் வாஸிம் கானை விடுவித்து ரிஷியை மீட்கச் சொல்லி விடுகிறார்.

ஆனால் படம் தொடங்கியது முதல் நம்மை புதிய அனுபவத்துக்குள் இழுத்துக் கொண்டு போவது சந்தோஷ் சிவனின் கேமராவும், ரஹ்மானின் இசைக் கோர்வையும் தான். நாம் ரெகுலராக கேட்கும் ராஜாவின் புல்லாங்குழல் அல்லாத பின்னணி இசை...ஸிந்தஸைஸரில் அதிரும் இசை புது அனுபவம் தமிழனுக்கு...

அரே 'ரோஜா ரஹ்மான்'....நீங்க எங்கே போனீங்க?..

த்ரில்லர் காட்சிக்கு பின்னணி இசை ஆட்களை கத்த வைத்து செய்திருக்கிறார். உபயம் குரு டி.ராஜேந்தர் போல... ஒரு அக்கா முறைமாமனைத் தான் கட்டிக்குவேன்னு சொந்தத்தங்கை கிட்ட சொல்ல மாட்டாளா?... என்ன மணி சார்? இந்த அபத்தக் காட்சியை வைத்து அரைமணி நேரம் நகர்த்தியாயிற்று...

"எவனோ வெளிநாட்டுக்காரன் பேச்சைக் கேட்டு காலங்காலமா வாழ்ந்த மூணுலட்சம் குடும்பங்களை விரட்டிட்டீங்களே... அவங்க எங்கப் போய் எப்படி இருப்பாங்க... இந்த மண்ணு அவங்களுக்கு சொந்தமில்லையா?... அந்த குழந்தைகளையும், குடும்பத்தையும் விரட்டி விட்டு வீடு எனக்கு தான் சொந்தம்னா அது எப்படி நியாயம்.... உலகத்துலயே விலை மதிக்க முடியாத ஒண்ணு.. உங்க உயிர்...."

"எங்களுக்கு உயிர் முக்கியமில்லை.... காஷ்மீர் தான் முக்கியம்..." "உங்கப் பிரச்சனை பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை..." "இது பேசிலாம் தீராது... பிரிஞ்சு தான் தீரும்..."

"பிரியாது... இந்தியா பிரியாது...."

மயிர் கூச்செரியும் வசனங்கள்... வசனம் சுஜாதா... நெகிழ வைக்கும் காட்சிகள் தான் படத்தின் ஆதாரம்....

அர்விந்த் சாமி போனபிறகு அவரை கட்டிப் போட்ட இடத்துக்கு வரும் மதுபாலா தரையில், மண்ணில் "காதல் ரோஜாவே' என எழுதி இருக்கும் இடம்...(பலகையில் எப்படி மண் வந்தது? அதுவும் காஷ்மீர் பனிப்பிரதேசத்தில்...)....

லியாகத் தன் தம்பி பிணமாகி வந்ததும் தனியாக நின்று அழுவது, தேசியக் கொடி எரிவதை சகிக்காமல் அதை அணைக்க முயல்வது, எல்லாவற்றுக்கும் மேலாக தீவிரவாதியே திருந்தி சென்று வா என அனுப்புவது...

இப்படிக் காட்சிக்கு காட்சி நெகிழ வைக்கிறார் மணி....நாஸரிடம் மதுபாலா தன் கணவனை மீட்கக் கேட்டதும், நாஸர்.. "எல்லையில் 3000 பேர் பனி, குளிர்னு பார்க்காம உயிரைப் பணயம் வைக்கிறோம். உனக்கு உன் புருஷன் கேட்குதா?....."

அடடே...இந்த முகநூல்க்காரர்களுக்கு டயலாக் உபயம் சுஜாதா தானா?...அற்புதம்....

வெள்ளைப் பணியாரம் கேட்கும் ரிஷியின் அதிகாரி எஸ்.வி.சேகரின் தந்தை திரு.வெங்கட்ராமன்,

ரோஜாவின் மாப்பிள்ளையை கடத்திட்டாங்களான்னு வேதனைப்படும் தில்லானா மோகனாம்பாள் வடிவு சி.கே.சரஸ்வதி, இந்தப் பாட்டிற்குப் பிறகு ஸோலோ நடனத்தில் வந்த 'ருக்குமணி...ருக்குமணி' பாட்டில் வரும் ராஜுசுந்தரம்,

அதே பாட்டில் வந்து பிரபலமாகி தனிக்காமெடி நடிகையாக மாறிய (படம்: பிரதாப்) ருக்குமணி என்கிற சுஜாதா, பாட்டியாக நடித்து பல சீரியல்களில் கலக்கிய வத்சலா ராஜகோபால்.... என பல முகங்கள்....

மிரட்டலான காஷ்மீரி லியாகத்தாக நடித்த ஷாஹித் கபூரின் அப்பா பங்கஜ் கபூர் தான் ரியல் டெர்ரர் நடிப்பு...

காஷ்மீரிலிருந்து கோயம்புத்தூர் வந்து அக்ரி காலேஜில் படித்து அதை வைத்து காஷ்மீரில் ஒன்றும் செய்ய முடியாமல் தீவிரவாதியாகி தம்பி இறந்ததும் கதறி அழும், வாய் பேச்சுக்கே திருந்தி மனம் மாறும் லியாகத்தாக பங்கஜ்...செம செட்டிங்..... பிரதி எடுத்தது போல் பொருந்துகிறார்.

ரோஜா தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனா எதிர்பார்க்காத ஜாக்பாட் இதன் ஹிந்தி டப்பிங் வட இந்தியாவில் பெரும் ஹிட்டடித்தது தான். மணியும், ரஹ்மானும் தேசிய அளவில் அல்லாது உலக அளவிலும் பிரபலமானார்கள்.

படத்தைப் பார்த்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் தன் செருப்பை கழட்டி சுவற்றில் வீசினாராம். "ஏம்மா?" எனப் பாட்டி கேட்க உங்களை அடிக்க முடியாதே.... என குரல் கம்மச் சொன்னாராம். ஏன்னா பாட்டி இந்த படத்துக்கு ஐஸ்வர்யாவை கேட்ட போது நடிக்க மறுத்துவிட்டதால்.... மதுபாலாவுக்கு நல்ல பெயர்.... ஆனா பேசும் போது அடிக்கடி கீழ் உதட்டை மேல் உதட்டோடு மூடிக்கிற அந்த மேனரிஸம் போரிங்.... அடிக்கடி அவரை அறியாமல் செய்கிறார்....

இந்த இடம் தான் மணிக்கு ஸ்வீட்டான சறுக்கல் தொடங்கியது.

இனி அகில இந்தியாவும் ரசிக்கும் ஒரு பொதுப்படத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் நுழைந்து விட்டார். நம்ம பழைய மணியும் மறைந்து விட்டார்.... ரோஜா அழகான ட்ரெண்ட் செட்டர்.... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+