Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெருநாய் டிபேட்டால் படவா கோபியை ட்ரோல் செய்கிறீர்களே! அவரது மறுபக்கம் தெரியுமா? அந்த மனசுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு 9 மணிக்கு மேல் ஏன் தெருநாய்கள் இருக்கும் தெருவுக்குள் போகிறீர்கள் என கேட்டதாக ட்ரோல் செய்யப்படும் படவா கோபியின் மறுபக்கம் என்ன என்பது தெரியுமா? இவரது சொந்த பக்கம் சோதனைகள் நிறைந்தது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

விஜய் டிவியில் நீயா நானா எனும் டாக் ஷோ கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து நீயா நானாவில் பேசி வருகிறார்.

television badava gopi neeya naana

அந்த வகையில் தெருநாய் கடியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறக்கும் சம்பவத்தில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஒரு பக்கம் தெருநாய்கள் வேண்டும் என்போரும் மறுபக்கம் தெருநாய்களே இல்லாத நகரம் வேண்டும் என்போரும் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு வெளியானது.

படவா கோபி

நாய்களுக்கு ஆதரவாக படவா கோபி, அம்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 8 மணி நேரம் எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 45 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.

தெருநாய்கள் குறித்த நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் படவா கோபி பேசுகையில், "இரவு 9 மணிக்கு மேல் நாய்கள் இருக்கும் தெருவில் ஏன் வருகிறீர்கள்" என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கோபிநாத், "என் வீடு இருக்கும் பக்கத்து தெருவுக்கு நான் செல்ல விசா எடுத்துக் கொண்டா வரணும்" என கேள்வி எழுப்பினார். அது போல் நாய்களுக்கு ஆதரவாக அவர் பேசியது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

எதிர்ப்பு

இந்த நிலையில் தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

தவறாக நினைக்காதீர்

பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

யார் இந்த படவா கோபி

ஆனாலும் அவர் மீதான ட்ரோல்கள் நின்ற பாடில்லை. இந்த நிலையில் படவா கோபி யார் என்பதை பார்க்கலாம். இவர் ஒரு நகைச்சுவை கலைஞர், திரைப்பட நடிகர் ஆவார். சென்னையைச் சேர்ந்த இவரை 2005 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார்.

பன்முகத் திறமையாளர்

இவர் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். இவர் மிமிக்ரி கலைஞரும் கூட! சென்னை 28 படத்தில் கோபி கிரிக்கெட் வர்ணனையாளராக நடித்திருந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்தார். பின்னர், சென்னை 28, வால்மீகி, சரோஜா, போராளி, பிரியாணி, ஆஹா கல்யாணம், பட்டத்து யானை, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இறந்த 5 வயது மகள்

இவர் ஹரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். படவா கோபியை என்னதான் ட்ரோல் செய்தாலும் அவரது மறுபக்கம் மிகவும் சோகமயமானது. கடந்த 2002ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நல பாதிப்பு காரணமாக அந்த குழந்தை 5 வயதில் அதாவது 2007ஆம் ஆண்டு இறந்துவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து படவா கோபியும் ஹரிதாவும் மீள்வதற்கே பல காலம் பிடித்தது.

300 குழந்தைகளை வளர்க்கும் படவா கோபி- ஹரிதா

இந்த நிலையில் AADHYA S HUG என்ற அறக்கட்டளையை தொடங்கிய படவா கோபியும் ஹரிதாவும் இந்த டிரஸ்ட் மூலம் 300- க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்த மனசுதான் கடவுள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+