அபிஷேக்குக்கு பட்டப்பெயர்...இது வேற லெவல்ல இருக்கு
சென்னை: நெட்டிசன்கள் கொண்டாடிவரும் அபிஷேக்கை போட்டியாளர்களும் வஞ்சனையில்லாமல் கலாய்த்து வருவது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரிவ்யூ கொடுக்கும் அபிஷேக்கை ரசிகர்களும் ரிவ்யூ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாயை கொடுத்து வம்பில் மாட்டும் கதையாக மாறிவிட்டது இப்போது அபிஷேக்கின் நிலைமை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

யூடியூபர் அபிஷேக்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனை தற்போது வெற்றிகரமாக ஒவ்வொரு நாளும் அடி எடுத்து வைத்து வருகிறது. ஒரு வாரம் முழுமையாக கடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமடைய தொடங்கிவிட்டனர். இது எல்லாம் நடக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் வெளியில் இருக்கும் போது நெகட்டிவாக பிரபலமடைந்த அபிஷேக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இவரை வைத்து நன்றாக கன்டன்ட் கிடைக்கும் என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.
Recommended Video

இந்த சீசனிலும் புதுமுகங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்று சொல்லும் போதே பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிகமாக யோசித்து வருவார்கள். காரணம் அதற்கு முன்பு வரைக்கும் அவர்களுக்கு அதிகமான பாசிடிவ் கேரக்டர் ரசிகர்களிடம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலர் தங்களுடைய கேரக்டரை இழந்திருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் இதை பார்த்துக்கொண்டிருக்கும் பலர் இந்த நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் இதில் கலந்து கொள்ளாமல் விலகி விடுகிறார்கள் .ஆனால் ஒரு சிலர் அதற்கு முன்பு யார் என்றே தெரியாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைகின்றனர். தற்போதைய சீசனிலும் பலர் அப்படித்தான் இருக்கின்றனர்.

நிகழ்ச்சியில் கலக்கும் அபிஷேக்
யூடியூப் சேனலில் பிரபலமான புதிதாக வளர்ந்து வலம் வந்து கொண்டிருக்கும் அபிஷேக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததும் அவருடைய ரசிகர்களுக்கு செம என்டர்டைமெண்ட்டாக இருந்திருக்கிறது. இவர் நிகழ்ச்சியை பார்த்து பலர் கழுவி கழுவி ஊற்றினாலும், அதனை கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருக்கும் இவர் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சியை பார்த்து அதற்குத் தகுந்த மாதிரிதான் போட்டியாளர்கள் பலரும் தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எல்லாம் அபிஷேக் சளைத்தவரல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

வித்தியாசமான பட்டப்பெயர்
தற்போது இந்த நிகழ்ச்சியில் ஜாலியும் கலகலப்பும் ஆக ஒரு வாரத்தை முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனாலும் போட்டியாளர்களுக்குள் நிலவும் ஆரோக்கியமான போட்டியோடு அவர்களுக்குள்ளே ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்து பட்டப் பெயர் வைத்திருக்கின்றனர். அதை ஆரம்பித்து வைத்த அபிஷேக்குக்கு அபிஷேகம் செய்யும் விதமாக அவருக்கு போட்டியாளர்கள் கூட்டு பொரியல் என்று பெயர் வைத்திருக்கின்றனர். இரண்டு மணிநேரத்தில் கெட்டுப் போய்விடும் என்று அதற்கு விளக்கமும் கொடுத்து இருக்கின்றனர். இது என்ன மாதிரி அர்த்தத்தில் இருக்கும் என்று தெரியாவிட்டாலும் இவருக்கு வைத்த பெயர் தான் ரசிகர்களின் மத்தியில் இவரை கலாய்ப்பதற்கு கண்டெண்ட் கொடுத்திருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications