தற்காலிகமாக நிறுத்தப்படும் செந்தூரப்பூவே சீரியல்...வருத்தத்தில் ரசிகர்கள்.
சென்னை: செந்தூரப்பூவே சீரியல் திடீரென்று இடைநிறுத்தம் செய்யப்படுவது அந்த சீரியலின் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
சீரியல் இப்போதுதான் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் இந்த மாதிரி செய்து விட்டார்களே என ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் திடீரென முடிப்பதற்கு என்ன காரணம் என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

செந்தூரப்பூ வாசம் வீசுமா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுகிறது. அதில் செந்தூரப்பூவே சீரியலும் ஒன்று. வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருந்த ரஞ்சித் இந்த சீரியலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடைய முதல் மனைவியாக பிரியாராமன் நடித்துக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய முதல் மனைவி இறந்து விடவும் அவர் இரண்டாவதாக தன்னுடைய இரண்டு மகள்களுக்காக ஸ்ரீ நிதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். துரைசிங்கமாக நடிக்கும் ரஞ்சித்தை தன்னுடைய மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் துரை சிங்கத்தின் தாய் மாமாவான ராஜேந்திரனால் பிரியாராமன் கொல்லப்படுகிறார்.

கதை எப்படியோ மாறிவிட்டது
தன்னுடைய முதல் மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த துரைசிங்கத்தை இரண்டாவதாக ராஜேந்திரனின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று குடும்பமே நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் துரைசிங்கம் ஸ்ரீ நிதியை திருமணம் செய்து கொண்டதை ராஜேந்திரனாலும் ஐஸ்வர்யா வாழும் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்ரீ நிதியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றி விடவேண்டும் அல்லது கொலை செய்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இவர்களின் சதியை பிரியாராமன் பேயாக வந்து முறியடித்து கொண்டிருக்கிறார்.

பேயாக மாறிய பிரியாராமன்
ஸ்ரீநிதி துரை சிங்கத்தின் மகள்களுடன் பாசமாக இருந்தாலும் அவர் வயிற்றில் குழந்தை வளர்வதை ஏற்றுக்கள்ளாத துரை சிங்கத்தின் மூத்த மகள், ஸ்ரீநிதியிடம் பிடிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவர் மீதும் அதிக பாசத்தோடு நடந்து கொண்டிருக்கும் ஸ்ரீநிதி பிரியா ராமன் முழு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது தந்தை மகளின் பாசத்தை போன்று ஆரம்பித்து அதற்கு பிறகு கதை இரண்டாவது திருமணத்தில் தொடங்கி தற்போது பேய் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. பிரியாரமன் பேயாக என்ட்ரியாகும் போதே பல மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை கலக்கி வந்தது. அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் செந்தூரப்பூவே வில் தெரிகிறதே என்று கூறிவந்தனர்.

இப்படி செய்யலாமா
பிரியா ராமனின் என்ட்ரி இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பமாக இருந்தாலும் அவர் வந்த பிறகு இந்த சீரியல் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலுக்கு டிஆர்பி அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் திடீரென்று சீரியலை இடை நிறுத்தம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதுவும் ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் பொறுத்து இருந்து பார்த்தால்தான் தெரியும் சீரியல் மீண்டும் எந்த அளவிற்கு சூடு பிடிக்கும் என்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications