அட பாவமே..! ஜித்தன் ரமேஷுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? பிக் பாஸில் அப்படி நடந்துக்க காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜித்தன் ரமேஷ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதத்தை பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தான் செய்யும் சின்ன சின்ன தவறுகளால் தன்னுடைய தம்பி மற்றும் அப்பாவின் பெயர் கெட்டு போய் விடக்கூடாது என்று தான் பார்த்து பார்த்து நடந்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் நடித்து பிரபலம் ஆகி ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் பெயரை தனது அடைமொழியாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் ஒருவர் தான் ஜித்தன் ரமேஷ். இவர் நடிகர் ஜீவாவின் அண்ணனாகவும் சினிமா தயாரிப்பு நிறுவனமான ஆர் பி சவுத்ரியின் மகன் தான். சமீபத்தில் அவர் தன்னுடைய திரை வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார்.

This is the explanation given by actor Jitan Ramesh about the Bigg Boss show

ஜித்தன் ரமேஷ் ஒரு வாரிசு நடிகராக இருந்தாலும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மட்டும் ஹிட்டானது. இவருடைய திறமைக்கு தகுந்த சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது. ஒரு நல்ல நடிகராகவும், ஒரு நல்ல டான்ஸராகவும் இருந்து வரும் ஜித்தன் ரமேஷ் தற்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை ஜீவாவோடு சேர்ந்து கவனித்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகள் குறையவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இவரும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் வாழ்க்கையில் மீண்டும் ஏற்றம் கிடைத்திருக்கிறது. தற்போது மூன்று படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் பர்கானா என்ற திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் ஜித்தன் ரமேஷ் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது ஜித்தன் ரமேஷ் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

அந்த நேரத்தில் அவர் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கிறார், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறார், சண்டை நடக்கும் இடங்களில் அமைதியாக போவது, சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பது என இவருடைய செயல்களை குறித்து அடிக்கடி மீம்ஸ்கள் வைரல் ஆகி வந்தது. இதனாலேயே மக்கள் அவரை சில தினங்களுக்குப் பிறகு எவிக்டாகி இது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

இந்த நிலையில் தான் ஏன் பிக் பாஸ் வீட்டில் அப்படி நடந்து கொண்டேன் என்ற காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது அவருடைய அப்பா ஒரு தயாரிப்பாளர், தன்னுடைய தம்பி ஒரு முன்னணி நடிகர், தானும் ஒரு நடிகர் அதனால் அந்த வீட்டில் என்னால் ஏதாவது கலவரமோ சண்டையோ ஏற்பட்டால் அது என்னை என் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களின் இமேஜையும் பாதிக்கும்.

This is the explanation given by actor Jitan Ramesh about the Bigg Boss show

எனக்கும் கோபம் அதிகமாக வரும் அந்த நேரத்தில் நான் ஏதாவது வார்த்தையை விட்டால் என்னை மட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் அது கேள்விக்குறியாக்கி விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் நான் அப்படி பொறுமையாக நடந்து கொண்டேன். ஆனால் உண்மையில் என்னுடைய கேரக்டரே வேறு எனக்கு இப்படி ஒரு பின்புலம் இல்லாமல் இருந்திருந்தால் நான் வேற மாதிரி ஆடி இருப்பேன் என்று கூறி இருக்கிறார்.

நான் மட்டுமல்ல என்னை போல பிரபலங்களின் குழந்தைகளுக்கு இதே பிரச்சனை தான். சுய கேரக்டரை கூட வழி காட்ட முடியாது. அப்படி காட்டினால் அது நம்மளை மட்டும் அல்ல நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கும். இதனாலையே பலர் பயந்து பயந்து தான் எதையும் செய்ய வேண்டியது இருக்கிறது. எப்போதும் என்னுடைய திறமைக்கு தகுந்த வாய்ப்பு சரியாக அமையவில்லை ஆனால் கண்டிப்பாக கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+