Thug Life: எப்படியிருந்த மணிரத்னம் இப்படியாகிட்டாரே! தக் லைப்பில் Worst writing!ரசிகர்கள் விமர்சனம்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன்- சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தில் ரங்கராய சக்திவேலு நாயக்கர், சிறையிலிருந்து வந்ததுமே த்ரிஷா வீட்டிற்கு சென்றதாலும் அவர் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதை போல காட்சிகளாலும் அவருடைய ரோல் ஆரம்பத்திலேயே அடிவாங்கிவிடுவதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேலு நாயக்கர் - ரங்கராய சக்திவேலு நாயக்கர்.

ஒரு படத்தின் வெற்றி அந்தப் படத்தின் நாயக கதாபாத்திரம் நமக்கு தரும் இமேஜ். அந்த இமேஜ் வைத்து தான் நாம் நாயகன் பக்கம் நின்று படத்தைப் பார்ப்போம். முதல் அடி அங்கே விழுகிறது.
வேலு நாயக்கர்
வேலு நாயக்கர் ஏழைகளுக்காகவும், நியாயத்துக்காகவும் எதுவும் செய்வார். அந்த ஊரே அவர் குடும்பம். போலீஸ் அதிகாரியின் மகளுக்கு தீமை செய்த வாலிபனை கொன்று தண்டனை தருவார். அவரது 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை'ங்கிற பாலிஸியை நாம ஏற்றுக் கொள்வோம்.
ரங்கராய சக்திவேலு
ரங்கராய சக்திவேலு என்கிற காயல்பட்டிணத்துக்காரன் பழைய தில்லியில் யாருக்காக என்ன வேலை செய்கிறார் என்பதை விட அவரின் முதல் காட்சியிலேயே சிறையிலிருந்து நேரே கீப் வீட்டுக்கு செல்வதாக வைத்திருப்பதிலேயே கேரக்டர் சர்ரென்று தாழே போய் விடுகிறது.
காம ஆசை
அதோடு விட்டால் கூட பரவாயில்லை. அவர் ஒரு காம ஆசை வீக்னஸ் கொண்டவர். அதனாலேயே அவர் அழிவதாக எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்து மனைவியிடமே நடிப்பதும், பொய் சொல்வதும் விழுந்த கேரக்டரை மேலும் வீழ்த்துகிறது.
பொய்யன்
பொய்யன். மனைவியை வார்த்தைகளால் வீழ்த்துபவன்.
ஆனால் மனைவி மீது அதீத பாசம் கொள்வது போல நடிக்கும் இந்த கேரக்டர், தன் கீப் இந்திராணிக்கு விபத்து நிகழ்ந்து பழையதெல்லாம் மறந்தும், தானும் சாவிலிருந்து பிழைத்து வந்தும் தன் பழைய காதலி வீட்டின் முன்னே காத்திருக்கிறது காதலுக்காக.
அதீத காமம்
தன்னை விட்டு விட்டு தன் தம்பி போன்றவனோடு வாழும் த்ரிஷா மீது அதீத காமம் கொண்டதாக ரங்கராய சக்திவேலு கேரக்டர் விழுந்து விடுவதால் மிச்சக் காட்சிகள் ஒட்டவேயில்லை. நாயகன் படத்தில் ஒரு ஒன்லைனர் இருந்தது.
துரோகி
'கத்தியெடுத்தவன் எவ்ளோ நல்லது செய்தாலும் கத்தியால் தான் சாவான்' என்பது. ஆனால் இதில் அப்படி ஒரு ஒன்லைனர் இல்லை. கத்தி எடுத்த ரங்கராய சக்திவேலு கடைசியில் வயலில் விவசாயம் செய்கிறார். அவர் வளர்த்த, டெம்பரவரி லீவ் வேகன்ஸி இன்சார்ஜ் எடுத்த அமரன் சிம்பு அநியாயத்துக்கு சாகிறார். இதில் 'துரோகி..துரோகி' என கமல் சொல்லி சொல்லி அடிக்கிறார்.
அபிராமி- த்ரிஷா
அப்போ கமல் அபிராமிக்கும், த்ரிஷாவுக்கும் செய்வது என்னவாக இருக்கும்? நாயகன் வேலு ரெட்லைட் ஏரியாவில் கிடைத்த பெண்ணை தாலி கட்டி மனைவியாக்கும் போது தக்லைஃப் வேலு வைப்பாட்டியாக்கிக் கொள்கிறார். அந்த வைப்பாட்டியை அவர் வளர்த்த பிள்ளையே தனக்கும் வைப்பாட்டியாக்கிக் கொள்கிறார்.
கமல் கேரக்டர்
இதனால் கமல் கேரக்டரோடு சிம்பு கேரக்டரும் கீழே விழுகிறது. த்ரிஷா கேரக்டரே இல்லாத கேரக்டர். 80களின் திரைப்படங்களில் சில்க், ஜெயமாலினி, அனுராதா போன்ற கேரக்டர்கள் மோசமான தொழில் செய்வார்கள். ஆனால் ஒரு காட்சியில் நாயகனுக்கு உதவி செய்து தன் உயிரை விட்டு நம் மனதில் இடம்பிடித்து விடுவார்கள். இதில் த்ரிஷாவுக்கு அப்படி ஒரு கேரக்டர் தான்.
நல்லதே இல்லை
ஆனால் கடைசி வரை நல்லத்தனம் எதுவுமேயில்லை. சப்பென்று அறைந்து உழைச்சு சாப்பிடேம்மா என்று சொல்லத் தோன்றுகிறது. கமல் வளர்த்த சிம்பு அடியாளாகிறார். போலீஸ் வளர்த்த அவர் தங்கை டாக்டராக இருக்கிறார். இதிலேயே மறைமுகமாக சங்கதி இருக்கிறது.
அன்னியம்
வேலு நாயக்கர் வேட்டி கட்டிய தமிழர். மும்பையில் இருந்தாலும். ரங்கராயர் தில்லியில் பைஜாமா. ஒட்டவேயில்லை. குள்ளமாக வேறு தெரிகிறது. அன்னியமாகிறது. கேரக்டர்களை தீர்மானித்து அவர்கள் மீது காட்சிகளை தீர்க்கமாக எழுதாதது படம் பார்ப்பவர்களை அன்னியமாகவே வைத்திருக்கிறது. மணியின் Poor writing. Worst writing also...
எப்படி இருந்த மணி...? என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications