டாப் குக்கு டூப் குக்குவில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகை.. கண்ணீரோடு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் யார் வெளியேறினார்கள்? என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். இத்தனை நாட்களும் இந்த நிகழ்ச்சி கலகலப்பாக இருந்த நிலையில் முதல் முறை இந்த நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் வெளியேறும்போது எல்லா போட்டியாளர்களும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் டாப் குக்காக கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் நடிகர் சிங்கம்புலி, பெப்சி விஜயன், சுஜிதா, சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, ஐஸ்வர்யா, தீனா, நரேந்திரா, ஷாலி போன்றோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களோடு விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த பலர் இந்த நிகழ்ச்சியில் டூப் குக்காக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட ஐந்து வாரமாகி இருக்கும் நிலையில் இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் நடிகை சோனியா அகர்வால் முதல் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்.
முதல் வாரத்தில் இருந்தே டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்த நிலையில் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் தண்ணீர், எண்ணை இல்லாமல் சமைக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக சமைக்கவில்லை என்று சொல்லி நடிகை சோனியா அகர்வால் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் வெளியேறும்போது கண்ணீரோடு எல்லா போட்டியாளர்களிடமும் விடைபெற்று இருக்கிறார்.

இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சி காமெடியாகவும் கலகலப்பாகவும் இருந்த நிலையில் இந்த வாரத்தில் முதல் எலிமினேஷன் நடைபெற்றது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதிலும் நடிகை சோனியா அகர்வாலுக்கு ஏற்கனவே அதிகமான ரசிகர்கள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் சில வாரங்களாகவே இளைஞர்கள் மத்தியிலும் அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு உருளைக்கிழங்குக்கு தோல் உரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது சோனியா அகர்வால் உருளைக்கிழங்குக்கு வலிக்க கூடாது என்பது போன்று லேசாக தோல் சீவிக் கொண்டிருந்ததை வைத்து அதிகமான மீம்ஸ்களை இளைஞர்கள் பறக்க விட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் சோனியா அகர்வால் வெளியேறி இருப்பது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications