70 வயசு பாடகருக்கு முத்தம் தேவையா? அதை பாடியதுமே பதறிய வைரமுத்து.. எஸ்பிபி ஒரு தெய்வப்பிறவி: பிரபலம்
சென்னை: பிரபல பாடகர் உதித் நாராயணனை தொடர்ந்து வடமாநில மீடியாக்கள் வசைபாடுவது சரியல்ல என்றும், தன்னிலை விளக்கத்தை அவர் தந்தபோதும், ஒரே விஷயத்தை ஊடகங்கள் பெரிதாக்கி வருவது ஏற்புடையதல்ல என்றும், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி பாடகர் உதித் நாராயணன், தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்கால், ஒடியா உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.. தமிழில் உதித் நாராயணன் பாடிய அத்தனை பாடல்களுமே ஹிட்டானவை.

சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில், பாடகர் உதித் நாராயணன் பங்கேற்றிருந்தார்.. இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பாடகர்: அதாவது, "டிப் டிப் பர்ஸா பானி" என்ற பாட்டை உதித் பாடும்போது, போட்டோ எடுப்பதற்காக இளம் பெண்கள் பலர் அவரிடம் குவிந்தனர். அப்போது, செல்பி எடுக்கும்போது ஒரு ரசிகை பாடகர் உதித்திற்கு கன்னத்தில் முத்தமிட்டார்.. பதிலுக்கு உதித் நாராயணன் அந்த ரசிகையின் உதட்டில் முத்தம் தந்தார்.. இதேபோல, செல்பி எடுக்கும் ரசிகைகள் சிலருக்கு கன்னத்திலும், உதட்டிலும் முத்தமிடுகிறார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி, கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.
கண்டனங்கள் அதிகமாகவும், இதுதொடர்பாக உதித் நாராயணன் விளக்கம் தந்திருந்தும்கூட, வடமாநில ஊடகங்கள் இதை மிகப்பெரிய விவாதமாக்கி வருகின்றனர். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இதுகுறித்து தன்னுடைய சேனலில் பேசியிருக்கிறார்.
உதித் நாராயணன்: Cheyyaru Balu டியூப் சேனலில், "உதித் நாராயணன் நிறைய தமிழ் ஹிட் பாடல்களை தந்திருக்கிறார்.. தான் எழுதிய ஈஸ்வரா பாடலை உதித் நாராயணன் பாடியதுமே அதை ஒருமுறை கேட்க நினைத்துள்ளார் வைரமுத்து.. அந்த பாட்டில் "பிரியமான பெண்ணே" என்பதற்கு பதில், "பெரியம்மா பொண்ணே" என்று பாடி வைத்திருந்தாராம்.. இதைக்கேட்டு பதறிப்போன வைரமுத்து, மறுபடியும் அதே வரிகளை சரியாக உச்சரித்து பாட வைத்தாராம்.
இப்போது 70 வயதாகும் உதித் நாராயணன் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.. நிகழ்ச்சியின் முடிவில், உற்சாக மிகுதியில், ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப், செல்பி எடுக்க குவிந்துள்ளனர்..
கன்னத்தில் முத்தம்: அதில், ஒரு பெண் வாழ்த்து சொல்லும்போது, கன்னத்தில் முத்தம் தந்துட்டார்.. உடனே பதிலுக்கு கன்னத்தில் முத்தம் தராமல் உதட்டில் தந்திருக்கிறார் உதித் நாராயணன். இதைத்தான் வடமாநில மீடியாக்கள் விவாதித்தும், விமர்சித்தும் வருகிறார்கள். 70 வயதில் தாத்தா இப்படி முத்தம் தரலாமா? என்று கேட்டு போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.
ஆனால், தனக்கு முத்தம் தந்ததால், அந்த பெண் கோபமாகி, எதிர்ப்பு தெரிவித்தாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ அல்லது பொதுவெளியில் இதுசம்பந்தமான குற்றச்சாடடை முனவைத்தாலோ, உதித் நாராயணனை நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணே அதை ஏற்றுக்கொண்டு கடந்து சென்றுவிட்டார். அப்படியிருக்கும்போது, உதித்தை வசைபாடுவது சரியல்ல. அதிலும், தன்னிலை விளக்கத்தை அவர் தந்தபோதும், இந்த விஷயத்தை வடமாநில ஊடகங்கள் பெரிதாக்கி வருகிறார்கள்.
சக பாடகிகள்: அதுக்காக, இதற்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்ட பல இசை நிகழ்ச்சிகளில், சக பாடகிகளான சாதனா சர்க்கம், ஸ்ரேயா கோஷல் போன்றோருக்கு கன்னத்தில் தந்துள்ளார் உதித் நாராயணன். எதேச்சையாக தந்த இந்த முத்த வீடியோக்களையெல்லாம், இப்போது வடமாநில மீடியாக்கள் பரப்பி வருவதும் சரியல்ல.
இந்த நேரத்தில் எனக்கு எஸ்பிபி நினைவுக்கு வருகிறார்.. இதுவரை எந்த நிகழ்ச்சியிலும், எஸ்பிபி அருகில் எந்த பாடகிகளும் நின்றதில்லை.. அப்படியே பக்கத்தில் நின்று அவர்கள் பாடினாலும், அவர்களது தலையில் கை வைத்து மகளை போல ஆசீர்வதிப்பார்.. உதித் நாராயணன் போன்றவர்கள் குறித்த இதுபோன்ற செய்திகள் வெளியாகும்போது. எஸ்பிபி போன்றோரெல்லாம் தெய்வப்பிறவிகள்" என பேசியிருக்கிறார் செய்யாறு பாலு.











Click it and Unblock the Notifications