கலைஞர் டிவியின் “வா தமிழா வா” நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம்? மனம் திறந்த கரு. பழனியப்பன்
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இலக்கியம், சினிமா அரசியல் என எல்லா துறையிலும் சிறந்து விளங்கும் கரு பழனியப்பன் விவாத மேடையையும் விட்டு வைக்காமல் கலக்கி வருகிறார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் ஜீ தமிழில் ஒளிபரப்பான "தமிழா தமிழா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் சாயலாக இருந்தாலும் அதிலும் தன்னுடைய தனித்துவத்தால் கரு.பழனியப்பன் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார். ஒரு சில வருடங்களாகவே அவர் அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.
அது குறித்து அந்த நேரத்தில் கரு பழனியப்பன் பேசுகையில், "எந்த இடத்தில் நம்மால் சுயமாக முடிவெடுக்க முடியாமல் போகிறதோ... நம்முடைய முடிவுகள் எங்கே தடுக்கப்படுகிறதோ அதில் நாம் இருந்து அர்த்தமில்லை என்பதால் அதிலிருந்து விலகி விட்டேன்" என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து கலைஞர் டிவியில் "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிகழ்ச்சியும் பிரபலம் அடைய தொடங்கியது ஆனால் திடீரென்று தற்போது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எதனால் கரு. பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில், "நான் விலகியதற்கு நீங்கள் நினைக்கிற மாதிரி எந்த சர்ச்சையான காரணமும் கிடையாது. பணிச்சுமை காரணமாக மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் மற்றபடி எந்த காரணமும் இல்லை" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் கரு பழனியப்பன் அதிகமாக எந்த திரைப்படத்திலும் இப்போது நடித்தது போல தெரியவில்லை. ஆனால் எதற்காக தனக்கு அதிகமான வேலை இருக்கிறது என்று சொன்னார் என்று ரசிகர்கள் கேள்விகளுக்கு வருகிறார்கள்.
அதே நேரத்தில் புதியதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் ஆரி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார்? என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்தோடு இருப்பதாக கூறி வருகிறார்கள். நடிகர் ஆரிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்திருந்தது. இந்த நிலையில் இவர் தொகுப்பாளராக வந்திருக்கும் நிலையில் தனக்கு கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்வாரா? இல்லையா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications