"வடிவேலு என்னை பாடாய்படுத்திவிட்டார்!” மானம், மரியாதை எனக்கு முக்கியம் - நடிகை சோனா பகீர் குற்றச்சாட்டு
சென்னை: 90ஸ்களின் இறுதியில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனா, நடிகர் வடிவேலு குறித்து அதிர்ச்சி தரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் 'குசேலன்' திரைப்படத்தில் அவருடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் வாவ் தமிழா யூடியூபில் அளித்த பேட்டி ஒன்றில் சோனா இந்த பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
சோனாவின் குற்றச்சாட்டு
"வடிவேலு சார் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதும், அவரை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால், எனக்கு அவருடன் செட்டாகவில்லை. 'குசேலன்' படத்தின் படப்பிடிப்பில் அவரது குணாதிசயம் (கேரக்டர்) என்னைப் பலவிதமாகப் பாடாபடுத்திவிட்டது," என்று சோனா வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், "படமும் சரியாகப் போகவில்லை. அதன்பின் எங்களுக்கு (வடிவேலுவுடன் இணைந்து நடிக்க) 16 பட வாய்ப்புகள் வந்தன," என்றும் குறிப்பிட்டார்.

"என் மானமும் மரியாதையும் எனக்கு மிகவும் முக்கியம். ரோட்டில் நின்று பிச்சைகூட எடுத்துவிடலாம், அந்த மாதிரி நடித்துச் சம்பாதிக்கிற காசு வேண்டாம் என்ற முடிவில் நான் தெளிவாக இருந்தேன். வடிவேலுவைப் பற்றி காரித்துப்பும் ஆட்கள் பலர் இருக்கிறார்கள். அவர் நடிப்பில் ஒரு லெஜெண்ட் தான், ஆனால் மனிதராக அவர் மதிப்பில்லாதவர், 'நோ கமெண்ட்' (கருத்து இல்லை)" என்று சோனா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நடிகை சோனா குறித்த தகவல்கள்
46 வயதாகும் நடிகை சோனா, இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட சோனா, தனது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படத்தையும் இயக்கி சில சிக்கல்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் தான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் அதே போல சோனாவும் தன்னைப் பற்றிய சர்ச்சையாக இருந்தாலும் சரி நல்ல விஷயமாக இருந்தாலும் சரி அதை ஓபன் ஆக பேசி விடுவார்.
வடிவேலுவின் திரைப் பயணம்
'வைகைப்புயல்' வடிவேலு, தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 1990களில் தனது திரைப் பயணத்தைத் தொடங்கி, தனது உடல்மொழி, தனித்துவமான உச்சரிப்பு, மற்றும் முகபாவனைகள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். 'சின்ன கவுண்டர்', 'காத்தவராயன்' போன்ற படங்கள் மூலம் தனது அடையாளத்தைப் பதித்த வடிவேலு, 'வின்னர்', 'கிரி', 'சண்டக்கோழி', 'மருதமலை', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது சில வசனங்கள் அன்றாட வாழ்விலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த வடிவேலு, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மற்றும் 'மாமன்னன்' போன்ற படங்கள் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இந்த சர்ச்சைக்கு வடிவேலு தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications