வேணும்னே கேஸ் போட்டு இருக்காரு.. அந்த குடும்பத்து பையன் லவ் பண்றியானு கேட்டான்! வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா கதை எழுதி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் வனிதா பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஏற்கனவே குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அவங்க குடும்பத்து பையன் என்னிடம் என்ன லவ் பண்றியா? என்னுடைய அப்பாவை லவ் பண்றியா என்ற கேட்டான் என்று வனிதா பேசியது இணையத்தில் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒரு சில நடிகர்கள் நடிகைகள் என்ன பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்திவிடும். அது போல தான் நடிகை வனிதாவும் மனதில் பட்டதை எல்லாம் டப்பு டப்பு என்று பொதுவெளியில் பேசி விடுகிறார். இதனாலே அவர் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். விஜயகுமாரின் மகளான வனிதா சில வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பாவோடு சொத்து தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது தன்னுடைய அப்பா மற்றும் குடும்பத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். அதற்கு விஜயகுமார் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.

அதுபோல வனிதாவின் அம்மா நடிகை மஞ்சுளா இறப்பின் போதும் வனிதா இறுதி சடங்க்கில் கலந்து கொள்வதற்கு விஜயகுமார் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் உட்பட சில சினிமா பிரபலங்கள் தலையிட்டு அனுமதி வாங்கி கொடுத்தனர். அதற்குப் பிறகு வனிதா தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதையை வனிதா தான் எழுதி இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் ராத்திரி சிவராத்திரி என்ற பாடலுக்கு நடிகை கிரண் டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த பாடல் ட்ரைலரில் வெளிவந்த போது வனிதாவிடம் இந்த பாடல் இளையராஜாவின் பாடலாச்சே அதற்கு காப்பிரைட் வாங்கி விட்டீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு வனிதா நான் என்னுடைய மகளுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தோம். அப்போது அவரிடம் இந்த பாடலை பயன்படுத்துவதற்கு முறையாக அனுமதியும் வங்கி விட்டோம்.
அதோடு இந்த பாடலின் உரிமையை சோனி மியூசிக் வைத்திருக்கார்கள், அவர்களிடமிருந்தும் நாங்கள் அனுமதி வாங்கி விட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியாகும் நாளில் இளையராஜா இந்த தன்னுடைய பாடலை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடர்ந்து இருந்தார். தன்னுடைய பாடலை நீக்க வேண்டும் இல்லையென்றால் வனிதா தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று சொல்லி இருந்தார்.
இதனால் வனிதா கடும் கோபத்தில் இருந்ததால் அவரிடம் செய்தியாளர்கள் இந்த பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு வனிதா "அவர் வேணும்னே என் மேல கேஸ் போட்டு இருக்காரு, ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சனை இருக்கு இந்த பாடல் உரிமை சோனி மியூசிக் இடம் இருந்தாலும் இதை உருவாக்குவதற்கு அனுமதி கொடுத்தது என்னுடைய சொந்த பெரியப்பா தான். அந்த குடும்ப பிரச்சனையை வைத்து தான் இவர் இப்போது கேஸ் போட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அதோடு அவங்க குடும்பத்தில் இருந்து ஒரு பையன் என்னிடம் நீ என்னை லவ் பண்ணுறியா? எங்க அப்பாவை லவ் பண்றியான்னு கேட்டான். அப்பகூட உங்க அப்பாவ தான் லவ் பண்றேன்னு சொன்னேன். அந்த அளவுக்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நான் அந்த வீட்டில் ஒரு பொண்ணு போல தான் இருந்தேன். எனக்கு அந்த வீட்டில் அவ்வளவு உரிமை கொடுத்து இருந்தாங்க.
பவதாரணியும் நானும் அவ்வளவு ஒற்றுமையாய் இருந்தோம். என்னை பார்க்கும்போதெல்லாம் பவதாரணி நமக்குள் விட்ட குறை தொட்ட குறை இருக்குது என்று சொல்லுவா. இப்போ என் மேல கேஸ் போட்டு இருக்காருன்னா அவரோட சொந்த பொண்ணு பவதாரணிக்கும் இதே நிலைமை தானா? நான் இதற்கு மேல பேசினா பல விஷயத்தை சொல்லிடுவேன், அது அசிங்கமா போய்விடும்.
நான் குடும்ப பிரச்சனை எல்லாம் மறந்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். அவர பார்க்கும்போது கிப்ட் எல்லாம் வாங்கிட்டு போனேன். அப்ப கூட என் மீது அவருக்கு கோபம் இருந்திருந்தால் அவர் என்னை கூப்பிட்டு திட்டி இருக்கலாம். ஆனால் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இனி நானும் அதை லீகலாகவே பார்த்துக் கொள்கிறேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன் இளையராஜா ஒரு கடவுள்தான் அவர் ஒரு மேதை இசையில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. ஆனால் அந்த கடவுளே நம்மிடம் கோபம் கொண்டதுதான் எனக்கு வருத்தமாக இருக்கு" என்று வனிதா பேசி இருக்கிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications