வீட்டில் வைத்து அடிச்சு உதைச்சாங்க! சொந்த குடும்பமே ஏமாத்திடுச்சு! இவரு மட்டும் என்ன? லைவில் கதறி அழுத வனிதா
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தனது குடும்பத்தினர் மற்றும் இளையராஜா தொடர்ந்த வழக்கு குறித்துப் பேசியபோது கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடிகர் விஜய்யுடன் 'சந்திரலேகா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். ஆனால், திருமண வாழ்க்கை ஏமாற்றமாக முடிய, தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது மகள் தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் கதையை வனிதாவே எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'ராத்திரி சிவராத்திரி' பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அந்தப் பாடலுக்கான உரிமையை வாங்கிவிட்டதாக வனிதா கூறியிருந்தார்.
வனிதா, இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இருப்பினும், இளையராஜா அவர் மீது வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதில், இளையராஜா வீட்டுக்கு தான் மருமகளாக போயிருக்க வேண்டும் என்று வனிதா பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தனது திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்றும், தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி உறுப்பினராகும் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் கூறினார்.
தனக்கு ஏற்கனவே நிறைய கடன் இருப்பதாகவும், யூடியூப் சேனலில் உறுப்பினராகி தனது திரைப்படத்தை பார்ப்பதன் மூலம் உதவியாக இருக்கும் என்றும் பேசினார். அப்போது, தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் இளையராஜா தொடர்ந்து வழக்கு தொடுப்பது பற்றியும் பேசியிருந்தார். தனது சொந்த குடும்பத்தினரே பல துரோகங்கள் செய்திருப்பதாகவும், அக்காலத்தில் சமூக ஊடகங்களின் சக்தி பற்றி தெரியாததால், தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இப்போது சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும், ஆதரவு பெறவும் முடியும். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினர் தன்னை தெருவில் வைத்து அடித்து துன்புறுத்தியபோது கேட்க யாருமில்லை. இன்று தனக்காக பலர் குரல் கொடுப்பது சந்தோஷமாக இருந்தாலும், இளையராஜா வழக்கு தொடர்ந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தான் இளையராஜா வீட்டில் ஒருவராக இருந்ததாகவும், ஆனால் பணம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்றும் வேதனையுடன் தெரிவித்தார். குடும்பத்தினரே சொத்துக்காக பிரித்துப் பார்க்கும்போது, மற்றவர்கள் எப்படி விட்டுக்கொடுப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பெரிய திரைப்படங்களுக்கு பிரச்சனை வந்தால் சமாளித்து விடுவார்கள், ஆனால் தன்னைப் போல சிங்கிள் மதராக போராடுபவர்களுக்கு இதுபோன்று பிரச்சனை வருவது வேதனையளிக்கிறது என்று வனிதா அழுதபடியே கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications