என்னாது Publicity stuntஆ? என் மீதான தாக்குதல் மட்டும் ஜோவிகாவுக்கு தெரிஞ்சதுனா!.. கொந்தளித்த வனிதா
சென்னை: நான் தாக்கப்பட்டது அறிந்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் மகள் ஜோவிகா என்னிடம் ஓடோடி வந்துவிடுவார் என வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். இவர் வனிதாவை போல் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டி வந்தார். விசித்ரா, பிரதீப் என எல்லாருடனும் சண்டையிட்டு மரியாதையின்றி ஒருமையில் பேசி வந்தார்.

தனது மகள் ஜோவிகாவுக்காக ஆதரவு கேட்டு தனது எக்ஸ் தளத்தில் வனிதா அவ்வப்போது பாசிட்டிவ் விவகாரங்களை பகிர்ந்து வருகிறார். அது போல் தனது ரசிகர்கள் ஜோவிகாவுக்கு ஆதரவாக அனுப்பும் போஸ்ட்களையும் அவர் ரீட்வீட் செய்து வருகிறார்.
அவர் தனியார் யூடியூப் சேனல்களுக்கு ரிவ்யூவும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் சனிக்கிழமை இரவு கமல் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது அவரிடம் வந்த ஒரு நபர் "பிரதீப்புக்கா ரெட் கார்டு கொடுக்குறே, அதுக்கு நீ சப்போர்ட் வேற" என கூறி வனிதாவின் முகத்தில் ஓங்கி குத்திவிட்டு அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர் ஓடிவிட்டார்.
இதையடுத்து தாங்க முடியாத வலியால் துடித்த வனிதாவுக்கு முதலுதவி செய்யப்பட்டது. இந்த நிலையில் வனிதா முகத்தில் காயங்களுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் ஏன் போலீஸில் புகார் அளிக்கவில்லை. இது ஜோவிகா ஜெயிப்பதற்காக நடக்கும் publicity stunt என தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: அந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுப்பது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் என் மகள் ஜெயிக்க வேண்டும் என பப்ளிசிட்டிக்காக நடந்ததாக சிலர் சொல்வது வேதனையாக இருக்கிறது. இதனால்தான் தங்களுக்கு ஏதாவது நடந்தால் யாரும் போலீஸுக்கு போவதே இல்லை.

பாதிக்கப்பட்டவரை கிண்டல் செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். நான் ஓய்வு எடுத்து வருகிறேன். தனியார் இரவு நேரத்தில் போனது எனது தவறு. பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டியது எனது பொறுப்பு. இது போல் குண்டர்கள் வாழும் உலகில் நாம் வாழ்வது வேதனையாக இருக்கிறது.
வாழ்க்கையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. வெறுப்பையும் வதந்திகளையும் பரப்புவதை நிறுத்துங்கள். நான் அமைதியாக ஓய்வெடுக்க விடுங்கள் என மீடியாக்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். நான் வளர்த்த என் மகள் எனக்காக எதையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடிவந்துவிடுவார். எனக்கு இப்படி நடந்துவிட்டது என தெரிந்தால் அவரால் தாங்க முடியாது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கவே கூடாது என அவரையே குற்றம்சாட்டிக் கொள்வார். ஜோவிகா உலகின் சிறந்த மகள். அவளை விட்டுவிடுங்கள். இந்த தாக்குதலுடன் அவளை முடித்து போடாதீர்கள். இது என் பிரச்சினை என கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications