சரத்குமாருக்கு சளைக்காத மகள்கள்.. சகோதரியோடு சேர்ந்து வரலட்சுமி தொடங்கிய நிறுவனம்! ஆரம்பமே அசத்தல்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார், இப்போது தன் வாழ்க்கையில் ஒரு புதிய, மிக முக்கியமான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்த நிலையில், இப்போது தனது சகோதரியுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தானே இயக்குநராகவும் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி, திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

யார் இந்த வரலட்சுமி சரத்குமார்
நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவருடைய தாயார் சாயா தேவி. அவரும் ஒரு சில திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சரத்குமாரின் இரண்டாவது மனைவிதான் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். திரைக் குடும்பப் பின்னணியில் இருந்தாலும், வரலட்சுமி தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தவர்.
இவர் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும், வழக்கமான கதாநாயகி வேடங்களைச் செய்யாமல், துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தவர். தாரை தப்பட்டை, சர்கார், கிராக்கு (தெலுங்கு) போன்ற படங்களில் இவருடைய நடிப்பு, லேடி வில்லியாகவும், வலுவான துணை நடிகையாகவும் இவருக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது. நடிப்பில் இவர் தேர்ந்தெடுத்த வித்தியாசமான பாதை, இவரைப் பற்றிப் பல சர்ச்சைகள் எழ வழிவகுத்தாலும், தன் கருத்தை தைரியமாகப் பேசும் குணம் இவருக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. சம ஊதியம், பெண்களின் பாதுகாப்பு குறித்து இவர் அடிக்கடி குரல் கொடுப்பவர்.

தொடங்கிய புதிய பயணம்
வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில்தான் ஆர்ட் கேலரி உரிமையாளர் நிகோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு பக்கம் இருக்க, தொழில் வாழ்க்கையில் அடுத்த உச்சத்தைத் தொட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
அதற்கு அடையாளமாகத்தான், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் - சேப்டர் 1 என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். தனது சகோதரியுடன் சேர்ந்து தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது, அவருக்கு ஒரு மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.
இயக்குநராகும் வரலட்சுமி
இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்திலேயே, வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். படத்துக்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு: "சரஸ்வதி". சரஸ்வதி என்றாலே கலைகளின் அதிபதி. வரலட்சுமி தேர்ந்தெடுத்திருக்கும் இந்தத் தலைப்பு, அவருடைய கலை மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்தப் படத்தில், அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அவருடன், நடிப்பில் ஜாம்பவான்களான பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா போன்ற பிரபல நட்சத்திரங்கள் இணைவது, படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியிலும் இந்தப் படம் மிகவும் வலுவாக இருக்கிறது. முன்னணி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்கிறார். இவருடைய இசை எப்போதும் இளைஞர்களைக் கவர்வது. A.M. எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த வரலட்சுமி, இப்போது இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முக அவதாரம் எடுத்திருப்பது, அவருடைய துணிச்சலான ஆளுமையைக் காட்டுகிறது. சகோதரிகள் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கும் இவர்களுக்கு, திரையுலகம் சார்பாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 'சரஸ்வதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வரலட்சுமியின் அடுத்த கட்டப் பயணத்திற்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications