விக்ரமின் வீர தீர சூரன் படம் 6 மணிக்கு ரிலீஸ் உறுதி.. இயக்குனர் எமோஷனல் வீடியோ, ஜிவி பிரகாஷ் போஸ்ட்
சென்னை: இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீரதீர சூரன் படத்தின் ரிலீஸ் நான்கு வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சுமூகமாக பேச்சுவார்த்தை எட்டியதை தொடர்ந்து படம் மீதான தடையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த படம் இன்று மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று படத்தின் இயக்குனர் அருண்குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் எவ்வளவு ரிஸ்க் என்றாலும் தைரியமாக எடுக்கக் கூடியவர்கள். அதில் நடிகர் விக்ரமும் ஒருவர். தனக்கு என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்து வரும் விக்ரம்க்கு சில வருடங்களாகவே திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. இது அவருடைய ரசிகர்களை வருத்தமடைய செய்து வருகிறது.

விக்ரமின் கம் பேக்
சாமி, தூள் போன்ற ஹிட் படங்களில் மாஸ் காட்டிய விக்ரம் அதை தொடர்ந்து இப்போது பல்வேறு கேரக்டரில் விதவிதமாக நடித்து மிரட்டி கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஏதோ கதை மட்டும் எடுபடாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் இப்போது நடித்துக் முடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரிலீஸ் ஆகவில்லை
இந்த திரைப்படம் இன்று (27/3/2025) காலையில் வெளியாக இருந்தது. இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதுபோல சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. படத்தின் பிரீ புக்கிங் வேகமாக நடந்து வந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
வீர தீர சூரன் படத்துக்கு சிக்கல்
இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை வைத்திருக்கும் பி4யு நீதிமன்றத்தை அணுகியதால் வீர தீர சூரன் படத்தை நான்கு வாரம் ரிலீஸ் செய்யக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த பிரச்சனையை தீர்க்க தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பி4 யு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 7 கோடி ரூபாயை 24 மணி நேரத்திற்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று ஐவிஒய் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை நீங்கியது
இந்த நிலையில் இது குறித்து இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று சமரசம் ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக போடப்பட்டிருந்த தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறது. இதனால் இந்த திரைப்படம் மாலை 6:00 மணிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் வெளியிட்ட வீடியோ
இதுகுறித்து இந்த திரைப்படத்தின் இயக்குனர் அருண் பேசுகையில் வீர தீர சூரன் இன்று மாலையில் இருந்து ஒளிபரப்பாக போகிறது. எங்க அப்பா இன்று மூன்று முறை தியேட்டருக்கு போயிட்டு டிக்கெட் எடுக்க முடியாமல் வந்திருக்காங்க. அதை பார்க்கும்போதே தெரிகிறது இது சியான் ரசிகர்களுக்கும் எவ்வளவு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
மன்னிப்பு கேட்ட இயக்குனர்
உங்க எல்லாரிடமும் பட குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலையிலிருந்து தியேட்டரில் ஆரவாரத்தோடு காத்திருந்த சியான் ரசிகர்களுக்கும், இந்த பிரச்சனையில் துணை இருந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கும், திரை உலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
மகிழ்ச்சியான அப்டேட்
அதுபோல இந்தப் படம் அப்டேட் குறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருக்கிறார். அதில் இன்று மாலை 6:00 மணிக்கு முதல் வீர தீர சூரன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போகிறது என்று கூறியிருக்கிறார். நேற்று விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற சந்தோஷமான வீடியோவை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் வந்ததை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் இப்போது இந்த அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications