Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படபடப்பா இருக்கு! வளர்ந்துகிட்டே இருக்கிறது புள்ள இல்ல.. மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ்- வீழான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தன்னுடைய மகன் கதாநாயகனாக நடிக்கும் போது தனக்குள் ஏற்படும் உணர்வு குறித்து வெளிப்படையாக விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.

விஜய் சேதுபதியும் அவருடைய மகனும் ஏற்கனவே சிந்து பாத் படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு இப்போது பீனிக்ஸ்- வீழான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூர்யா சில மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ சர்ச்சை ஆனது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய மகன் பற்றி நேற்று பேசும்போது, "2019 இல் அனல் அரசு என்கிட்ட கதை சொல்லி இருந்தாரு. அப்போது நாங்க ரொம்ப நாள் கழிச்சு பார்த்துக்கிட்டதால இரண்டு பேரும் குடும்ப புகைப்படங்களை காட்டி கொண்டோம்.

Vijay Sethupathi Surya

பிறகு ஜவான் படப்பிடிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மகாராஜாவில் எனக்காக அனல் அரசு வந்து வேலை பார்த்திருந்தார். என்கிட்ட கதை சொன்ன பிறகு நம்ம வீட்ல அந்த வயசுல ஒரு பையன் இருக்கான் ஆனா அவனை பற்றி இவர் கேட்கவில்லையே என்று என் மனசுக்குள்ள தோணுச்சு. ஆனா செட்டில் வந்த பிறகுதான் அனல் அரசு என்கிட்டே உங்க பையன் இந்த கதைக்கு சரியா இருப்பார் என்று சொன்னாரு. அதை கேட்டு எனக்கு சந்தோஷமும் இருந்தது, பயமும் இருந்தது.

ஏன்னா சூர்யா அப்போதான் காலேஜ் சேர்ந்து இருந்தார். அதனால் இந்த படத்தை எப்படி பண்ணுவான் என்று சந்தேகம் இருந்தது. ஆனாலும் என்னுடைய பையன் முடிவுகளை அவனேத்தான் எடுக்கணும்னு நினைச்சேன். சிந்துபாத் படம் நடிக்கும் போது அவனுக்கு 14 வயசு தான் அப்போது அவன் எல்லா விஷயங்களையும் பழக வேண்டும் என்று ஏர்போர்ட் மாதிரியான இடங்களில் நான் அவனை தனியாக விட்டு விட்டேன். அப்போ அவனே வந்து என்கிட்ட அப்பா நான் இன்னும் வளரல, என்னை தனியா விடாதன்னு சொன்னான்.

இப்போ நடிக்கிற விஷயத்தையும் அவனே கையாளனும் என்று நினைத்தேன். அதனால அவனையே மாஸ்டர் கிட்ட கதை கேட்க சொல்லி இருந்தேன். பொதுவா நாங்க வீட்ல பேசும் போது நான் நடிச்ச படங்கள் பற்றி நிறைய பேசியிருக்கிறார். என் தொழில் சினிமா என்பதால் அதைப் பற்றிதான் குழந்தைகளிடம் அதிக பேசுவேன். மனித மனமும் மூளையை எப்படி வேலை செய்கிறது என்பதை அதன் வழியாகத்தான் என்னுடைய குழந்தைகளுக்கு சொல்ல முடியும்.

வளர்ந்து கொண்டே இருக்கிறது புள்ள இல்ல, ஒரு கட்டத்தில் அதுவே வளரனும்னு நினைச்சேன். அதனால் இந்த படத்தில் பூஜையில் இருந்து எதிலும் நான் தலையிடவில்லை. மொத்த சூட்டினிலும் ஒரே ஒருமுறைதான் கலந்து கொண்டேன். அவனிடம் இதை என்ஜாய் பண்றியா? என்ற கேட்டேன். அவனும் ஆமான்னு சொன்னான். அவ்வளவுதான், இந்த நிகழ்ச்சியில் என் மகனை மனதார வாழ்த்து இருக்கீங்க ரொம்ப நன்றி.

அனல் அரசு மாஸ்டர் ஸ்பீச் அரசியல்வாதி மாதிரி இருந்தது. தேவதர்ஷினிக்கும் அவங்க கணவருக்கும் நான் பெரிய ரசிகன். நீங்க உங்க மகனா பார்த்து வாழ்த்தியது பெரிய விஷயம். அதுபோல இந்த படம் நல்லா வந்திருக்கு, என் குழந்தைக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு. அவனை முதல் முறையா ஸ்கூல்ல சேர்த்து விட்ட மாதிரி ஒரு உணர்வு.

பக்கத்துல தான் என்னுடைய பட ஆடியோ லான்ச் நடந்தது. அப்போ நான் படபடன்னு இருந்தேன். அதைவிட இப்போ படபடப்பா இருக்கேன் ஆனாலும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்ன விட என் மனைவிக்கு தான் ரொம்ப சந்தோஷம். அவளுக்கு பேச வராது கூச்சமாய் இருக்கும். அதனால என் மனைவிக்கும் சேர்த்து நான் நன்றி சொல்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+