படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது சண்டை வந்துட்டு.. அந்த இயக்குநர் கூட நடிக்கவே கூடாது! விஜய் சேதுபதி ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை நித்யா மேனனும் இணைந்து நடித்த "தலைவன் தலைவி" திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாக ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஜய் சேதுபதி இந்த படத்தின் இயக்குநர் பாண்டியராஜன் பற்றி பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி பற்றி அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுக்க தொடங்கியது. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தொடங்கி விட்டார். சில நடிகர்கள் ஓவர் ஆக்சன் செய்வார்கள் ஆனால் இவர் ஓவர் ஆக்சன் செய்தாலும் அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திவிடுவார்.

பஞ்ச் வசனம் பேசினாலும் சரி, காதல் ரொமான்ஸ், ஆக்சன் காட்சிகளாக இருந்தாலும் சரி அந்த கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்துவிடும் விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கின்றனர். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன திரையில் இருந்துதான் இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது அதை மறக்காமல் இருக்கிறாரா? அல்லது இந்த எபிசோடுக்கு கிடைக்கும் பெரிய தொகைக்காகவா? என்று தெரியவில்லை.
ஆனால் சின்னத்திரை வெள்ளித்திரை என்று எல்லாவற்றிலும் கலக்கி கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரும் திரைப்படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கி விட்டார். வருடத்திற்கு பல திரைப்படங்கள் நடிக்கும் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டார். அதிலும் இவருடைய திரைப்படங்கள் இரண்டு வாரத்திற்கு ஒன்று வெளியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அதிகமாக ட்ரோலிலும் சிக்கி இருந்தார்.
கதை முக்கியத்துவம் இருக்கிறது இல்லையோ அதில் விஜய் சேதுபதி வந்துவிடுவார் என்று ட்ரோல் செய்து கொண்டிருந்ததை தொடர்ந்து இப்போது கதை அழுத்தம் உள்ள திரைப்படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடித்த மகாராஜா திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதற்குப் பிறகு ஏஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த திரைப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்பது போல பெரிதாக பரபரப்பு ஏற்படுத்தாமலேயே ஓடிடிக்கு வந்து விட்டது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி பாண்டியராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த பாடல்கள்தான் ரீல்ஸ்களில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் விஜய் சேதுபதி இந்த படத்தின் இயக்குநர் பற்றி பேசி இருந்தார். "இந்த படம் துவங்குவதற்கு முன்பு எனக்கும் இயக்குநர் பாண்டியராஜுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இவர் படத்தில் நடிக்கவே கூடாது என்று நான் நினைத்தேன். அவரும் அப்படியே நினைத்தார். ஆனால் எங்களுக்குள் சொந்த பிரச்சனையோ, பகையோ எதுவும் இல்லாததால் ஒரு கட்டத்தில் கோபம் அன்பாக மாறி இந்த படம் துவங்கப்பட்டது. பாண்டியராஜனை எனக்கு 2009 ஆம் ஆண்டு முதலில் தெரியும். நான் எனது தென்மேற்கு பருவக்காற்று படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு அவரை கூப்பிட போனபோது தான் அவருக்கு பசங்க படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications