டிடி டூ மணிமேகலை வரை! பிரியங்கா தேஷ்பாண்டே கால் வைத்ததும் ஓரங்கட்டப்பட்டார்களா விஜய் டிவி ஆங்கர்கள்?
சென்னை: டிடி முதல் மணிமேகலை வரை பிரியங்கா தேஷ்பாண்டேவின் என்ட்ரியால் காணாமல் போன விஜய் டிவி தொகுப்பாளர்களை பற்றி பார்க்கலாம். விஜய் டிவியை தற்போது பிரியங்காவும் மாகாபா ஆனந்துமே ஆக்கிரமித்துள்ளார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. இவர்களால் எத்தனையோ திறமையான ஆங்கர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர் என்றே சொல்கிறார்கள்.
சமூகவலைதளத்தை ஓபன் செய்தாலே மணிமேகலைக்கு ஆதரவும் பிரியங்காவுக்கு கடும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இதற்கு காரணம் நேற்று இரவு மணிமேகலை பரபரப்பாக வெளியிட்ட ஒரு போஸ்ட்தான்.

அதாவது குக் வித் கோமாளியில் இருந்து தான் விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கிய காரணம்தான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்த ஆங்கர் ஒருவர் , தான் குக்காக வந்ததை மறந்துவிட்டு ஆங்கரிங் செய்து எனது வேலைகளில் தலையிட்டு எனது வேலையை கெடுக்கிறார். நான் ஆங்கரிங்கிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. இப்படிப்பட்ட அனுபவத்தை சந்தித்ததே இல்லை.
அந்த பெண் ஆங்கருக்கு விஜய் டிவி அதிகம் ஷோக்களையும் நிகழ்ச்சிகளையும் வழங்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழு வாழ விடு என குறிப்பிட்டிருந்தார். இதுதான் தற்போதைக்கு ஹாட் டாப்பிக்காக உள்ளது. விஜய் டிவியை திறந்தாலே எல்லா ஷோக்களிலும் பிரியங்காவும் மாகாபாவும்தானா? என்ற சலிப்பை ஏற்படுத்துகிறது.
அதிலும் டிஆர்பியை கூட்டுவதற்காக மூக்குத்தி முருகன், ராமர் உள்ளிட்டோரை காதலிப்பது போன்றும் ஜொல்லு விடுவது போன்றும் நடித்து சிரிப்பு என்ற பேரில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஒன்று லவ், இல்லாவிட்டால் இரட்டை அர்த்த பேச்சுகள் மூலமும் மக்களை சிரிக்க வைக்கலாம், ஷோவை ஓட்டிவிடலாம் என கருதுகிறார்கள்.
இப்படி பிரியங்காவால்தான் எத்தனை தொகுப்பாளினிகள் காணாமல் போயுள்ளார்கள் என்பது தெரியுமா? பிரியங்கா அடியெடுத்து வைத்ததும் டிடிக்குதான் முதல் ஆப்பு. காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து ஒட்டுமொத்த மக்களையும் விஜய் டிவி பக்கம் திருப்பினார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வந்த நிலையில் பிரியங்கா வந்த பிறகு டிடி மார்க்கெட் குறைந்ததால் அவரை விஜய் டிவி கண்டு கொள்ளவில்லை.
அது போல் பாவனா- இவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் முதல்முறையாக பிரியங்கா நுழைந்த பிறகு பாவனாவுக்கு மார்க்கெட் குறைந்தது. இதனால் தனக்கு டம்மி நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒதுக்கியதால் கோபமடைந்த பாவனா, உங்கள் சங்காத்தமே வேண்டாம் என சொல்லி விஜய் டிவியை விட்டு ஒதுங்கி விட்டார்.
அடுத்தது ஜாக்குலின்- இவர் ரக்ஷனுடன் இணைந்து கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியை நடத்தினார், அங்கு ஜட்ஜாக வந்த பிரியங்கா, ஜாக்குலினின் வாய்ப்பையும் தட்டி பறித்தார். இதனால் இவர்களுடன் முட்டி மோத முடியாது என்பதால் அவராகவே ஒதுங்க சீரியலுக்கு சென்றுவிட்டார்.
அடுத்து ரம்யா - இவர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம், ஸ்டார் விஜய் சேனலில் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கினார். ஆனால் பிரியங்கா டிரென்ட்டானதை அடுத்து ரம்யாவை விட்டு விட்டு அடுத்தடுத்த வாய்ப்புகள் பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்டது. இதனால் அவரும் விஜய் டிவியை விட்டு சென்றுவிட்டார்.
அடுத்ததாக மணிமேகலை- குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு குக்காக வந்த பிரியங்கா தனது பணிகளில் அடிக்கடி குறுக்கிடுகிறார் என கூறி குக் விக் கோமாளியை விட்டு வெளியேறிவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications