பாக்கியலட்சுமி: ஆடிய ஆட்டத்திற்கு ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை.. நிற்கதியாக நிற்கும் இனியா.. பாக்யா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை இரண்டாம் தேதிக்கான எபிசோடில் நிதிஷ் பற்றிய உண்மைகள் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. அதனால் ஈஸ்வரி மயங்கி விழுந்து விடுகிறார். கோபி சுதாகர் குடும்பத்தின் மீது கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யா சுதாகருக்கு ஃபோன் செய்து பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா சுதாகர் வீட்டிற்கு சென்று விசாரிக்க அங்கு சுதாகர் நிதிஷுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவன் பிரண்டு எல்லாம் ஏதோ தப்பாக குடிச்சிட்டு போயிருக்காங்க அப்போ கூட இருந்ததால நிதிஷையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. இன்னைக்கு சாயங்காலத்திற்குள் வீட்டுக்கு வந்துடுவான் என்று சொல்லி அனுப்புகிறார். அதோடு உங்க மருமகனை நீங்கள் நம்புறீங்க இல்ல என்று கேட்க, பாக்கியா தலையாட்டிவிட்டு இனியாவுக்கு இந்த விஷயம் தெரியாது அதுக்குள்ள கூட்டிட்டு வந்துருங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ஏமாறும் பாக்கியா
மறுபக்கத்தில் கோபி இனியா வேலை பார்க்கும் இடத்திலிருந்து வெளியில் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டதும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் டாடி நான் வேலையை முடிச்சிட்டு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த இனியாவின் தோழி நாம அன்னைக்கு பேசிட்டு இருந்தமே சுதாகருடைய பையன் டிரஸ் கேஸ் பற்றி... அந்த பையனை இன்னைக்கு திரும்பவும் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும் இனியாவும் கோபியும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கோபத்தில் கோபி
அந்த பெண் போனதும் கோபி கார் மீது குத்தி கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதோடு நான் அன்னைக்கே வீட்டை விட்டு வந்துருன்னு சொன்னேன் நீ தான் கேட்கவில்லை என்று கோபி கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போது இனியா நிதீஷ் தன்னை தள்ளி விட்ட விஷயத்தை வாய் தவறி சொன்னதும் கோபி அதிகமாக டென்ஷன் ஆகிறார். மறுபக்கத்தில் வீட்டில் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருக்க, ஈஸ்வரி கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போது எதுவும் பதில் சொல்லாமல் இருக்கிறார்.
இனியா சொன்ன விஷயம்
பிறகு ஈஸ்வரி டிவி பார்க்க போகும்போது பாக்கியா நீங்க டிவி பார்க்க வேண்டாம் போய் தூங்குங்க என்று தடுக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் இனியாவும் வீட்டிற்கு வர இன்னைக்காவது வீட்டில் சொல்லிட்டு வந்திருக்கிறாயா? நீ முதலில் உன் மாமனார் வீட்டுக்கு சொல்லு! என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு கோபி இனி அந்த வீட்டிற்கு இனியா போக மாட்டா. இனி இதுதான் இனியாவின் வீடு என்று சொன்னதும் ஈஸ்வரி அதிர்ச்சி ஆகிறார்.
அதிர்ச்சியில் ஈஸ்வரி
பிறகு இனியா கண்கலங்கி பாக்யா மீது சாய்ந்து அழ, நிதீஷ் என்று சொன்னதும் உனக்கு எல்லாமே தெரியுமா? என்று பாக்கியா கேட்கிறார். உனக்கு தெரியுமா? என்று இனியா கேட்டதும், நிதிஷை அரெஸ்ட் செய்ததை நான் கண்ணால் பார்த்தேன் என்று பாக்கியா சொல்கிறார். பிறகு நிதிஷ் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் சொன்னதும் ஈஸ்வரி அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications