பாக்கியலட்சுமி: நிதிஷ் மரணம் கூட சுதாகர் பிளான் தானா? பாக்யா கண்டுபிடிக்கும் உண்மை! கோபி போலீஸிடம் சொன்ன விஷயம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 30ஆம் தேதிக்கான எபிசோடில், கோபியின் கைது, இனியாவின் நிலைப்பாடு, மற்றும் பாக்கியாவின் சந்தேகம் எனப் பல பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
எழிலின் எச்சரிக்கை
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இனியா துடிப்பதைக் காண முடிந்தது. எழிலைப் பார்த்து, "வீட்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கணும்," என்று அவர் கேட்கிறார். மேலும், "வெளியில யாருகிட்டயாவது போன் வாங்கி அப்பாவுக்கு கால் பண்ணி பார்ப்போமோ?" என்று கேட்கிறார். அதைக் கேட்ட எழில், "இப்போதைக்கு அப்பாவுக்கு போன் பண்ணினால் அது ஏதாவது ஒரு பிரச்சனையில தான் முடியும்," என்று இனியாவை எச்சரிக்கிறார்.

கோபியின் கைது
அந்த நேரம் பார்த்து செழியன், நியூஸ் பேப்பரில் கோபி கைது செய்யப்பட்ட விஷயம் போட்டுக் இருப்பதாக பாக்கியாவிடம் சொல்கிறார். அதைப் பார்த்த இனியாவும் பாக்கியாவும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். உடனடியாக, "டாடி பாவம், நான் போய் போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொல்லப்போறேன்," என்று இனியா ஆவேசத்துடன் கூறுகிறார்.
கோபிக்கு போலீஸ் அழுத்தம்
ஒருபக்கம், போலீஸ் ஸ்டேஷனில் கோபியை அடித்து சித்திரவதை செய்கிறார்கள். கோபி, "ரொம்ப தாகமா இருக்கு, தண்ணி கொடுங்க," என்று கேட்கிறார். அதற்கு போலீஸ், தண்ணீரை அவரது முகத்தில் ஊற்றிவிட்டு, "இனியாவை எங்க மறைச்சு வச்சிருக்க?" என்று கேட்கிறார். பின்னர், "வீட்டில் இருக்கிற எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு வருவேன்," என்று சொல்லி மிரட்ட, அதைக் கேட்ட கோபி, "அப்படி எல்லாம் செய்திடாதீங்க," என்று சொல்லி கெஞ்சுகிறார். மேலும், "நான் தான் அந்த கொலையை பண்ணேன்," என்று ஒப்புக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சுதாகர் வந்ததும், "கோபி தான் அந்தத் தப்பை பண்ணது," என்று சொல்கிறார். அதைக் கேட்ட சுதாகர், "அந்த குடும்பத்தை நம்ப முடியாது," என்று கூறுகிறார்.
பாக்கியாவின் சந்தேகம் - சிசிடிவி தேடல்
இதற்கிடையே, பாக்கியா இனியாவைப் பார்த்து, "சுதாகர் உன்னை கூப்பிட்ட இடத்தில ஏன் சுதாகர் இல்லாம நிதீஷ் மட்டும் இருந்தான்?" எனக் கேட்கிறார். மேலும், "ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கு," என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். பின் இனியா அங்கு நடந்த அனைத்தையும் பாக்கியாவிடம் சொல்ல, அதைக் கேட்ட பாக்கியா, "சிசிடிவியில் செக் பண்ணி பார்க்கனும்," என்று கூறுகிறார்.
கோபியின் கைது, இனியாவின் துயரம், மற்றும் பாக்கியாவின் சிசிடிவி தேடல் என இன்றைய எபிசோடு, அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புடன் முடிந்துள்ளது. கோபியை காப்பாற்ற பாக்கியா என்ன செய்யப் போகிறார்? சிசிடிவி காட்சிகள் உண்மையைக் கொண்டுவருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இனியாவின் துயரம்
ஏற்கனவே நிதீஷ் இறப்பதற்கு முன்பு இனியாவிடம் தன்னுடைய தந்தையை பற்றி தான் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் நிதிஷ் மற்றும் அவருடைய தந்தைக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அப்போது கூட சுதாகர் தன்னுடைய மகனை ஏதாவது செய்திருக்கலாமோ என்று சந்தேகமும் இப்போது எழுந்து வருகிறது. தன்னுடைய பிசினஸ் தான் முக்கியம் என்று பல இடங்களில் சொல்லிக் கொண்டிருக்கும் சுதாகர் தன்னுடைய மகன் விஷயத்தில் என்ன செய்தார் என்று எதிர்பார்ப்போடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications