எளிமையாக திருமணத்தை செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. மாப்பிள்ளை பற்றி உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா விஜய் டிவி பிரபலத்தை எளிமையான முறையில் திருமணம் செய்து இருக்கிறார்.
பிறகு முதல் முறையாக தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் ஆசிர்வாதங்களை பெற்று வருகிறார்.

பாக்கியலட்சுமி அமிர்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்விகா நிஜ வாழ்க்கையில் திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறாராம். சீரியலில் இவருக்கும் எழிலுக்கும் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது இவருடைய நிஜ திருமண செய்தி பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரைக்கும் சிங்கிளாக வலம் வந்து கொண்டிருந்த ரித்திகா விஜய் டிவியை சேர்ந்த பிரபலம் ஒருவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

வதந்திக்கு விளக்கம்
பாக்கியலட்சுமி சீரியலுக்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு குக்காகவும் பலருக்கும் தெரிந்தவர் தான் ரித்திகா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடன் பாலா நிகழ்ச்சியின் கண்டெண்டுக்காக பேசி பழகுவதை வைத்து பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகளை பரப்பி வந்தனர் .அதை குறித்து கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு நண்பர்களாக பழகுபவர்கள் எல்லாம் காதலித்து விடுவார்களா? ஒன்றாக சேர்ந்து நடித்தாலோ அல்லது வேலை செய்தாலோ உடனே காதல் என்று சொல்லி விடுவார்களா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் அதனால் இப்படி யாரும் பேசாதீர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

எளிமையான திருமணம்
அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் ரித்திகா கலந்து கொண்டிருக்கிறார்.இவருக்கு இன்று திருமணம் எளிமையாக முடிவடைந்து இருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை எளிமையாக செய்து கொண்டார். ரித்திகா திருமணத்திற்கு பிறகு இறுதியாக திருமதி வினோ கடவுளின் கிருபையுடன் உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் எங்களுக்கு வேண்டும் என்று திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரித்திகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுபோல ரித்விகாவுக்கு நவம்பர் 27ஆம் தேதி மாலை வரவேற்பு நடைபெற இருக்கிறதாம்

வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் இயக்குனர்களும் ரித்விகாவின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனராக இருக்கும் பிரவீன் பென்னட் ரித்விகாவுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதுபோல சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி அசோக், பவித்ரா ஜனனி, பிரவீனா டாடா, திரவியம் ராஜகுமாரன், ஸ்ரீநிதி என பல சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் பாலாவின் நிலைமை தான் பாவம் என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே பாலாக்கும் தனக்கும் நட்பை தவிர நடிப்பை தாண்டி எங்களுக்குள் எதுவும் இல்லை என்று விளக்கம் கொடுத்தாலும் சிலர் வேண்டுமென்றே இந்த பதிவிற்கும் பாலாவை பற்றி கருத்துக்களில் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications