டாப் சீரியல்கள் நேரத்தை மாற்றிய விஜய் டிவி..உங்களுக்கு பிடித்த சீரியலும் தான்! ரசிகர்கள் ஆசை நடந்தது
சென்னை: விஜய் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியல்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
டிஆர்பியின் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் தற்போது மூன்று சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
அதில் பாரதி கண்ணம்மா 2, சிறகடிக்க ஆசை சீரியல், மகாநதி சீரியல் என மூன்றும் இடம் பிடித்திருக்கிறது.

பொதுவாக சின்னத்திரை சீரியல்கள் என்றாலே அதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சேனலில் தொடர்ந்து சீரியல்களை பார்த்து பெரும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் சீரியலுக்கும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு ஏற்படுகிறது. அதுவும் இரவு நேர சீரியல்களுக்கு சொல்லவே வேண்டாம்.
அந்த மாதிரி தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியல், சிறகடிக்க ஆசை சீரியல், மகாநதி சீரியல் என மூன்றும் ஒன்பது மணி முதல் 10:00 மணி வரைக்கும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலை விட சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி சீரியல் என இரண்டுமே டிஆர்பி யில் நல்ல ரேட்டிங்கை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்களின் மத்தியிலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து தற்போது நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா 2 சீரியல் மற்றும் மகாநதி சீரியல் இரண்டுமே இயக்குனர் பிரவீன் பென்னெட் தான் என்பது பலருக்கும் தெரியும். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பார்ப்பு இப்போது இல்லை என்றும் அதனால் நேரத்தை மாற்றி விட வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது அதை சேனல் தரப்பில் இருந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றனர்.

அதன்படி சிறகடிக்க ஆசை இரவு 9 மணிக்கும், மகாநதி சீரியல் 9.30 மணிக்கும், பாரதி கண்ணம்மா சீரியல் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மாவின் தீவிரமான ரசிகர்கள் இரவு 10 மணிக்கு மாற்றி விட்டார்களே என்று ஃபீலிங்கில் கருத்துக்களை பதிவிட்டாலும், இந்த முடிவு நல்ல முடிவு என்று இதை பாராட்டியும் ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்துக்களை குவிக்கிறார்கள்.
-
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications