ஆஹா.. விஜய் டிவிக்கு வந்த புதுப் "பொண்ணு".. இது செம மேட்டரா இருக்கே.. !

Subscribe to Oneindia Tamil

சென்னை : வாழ்க்கையில் சந்தோஷம் தானே முதலிடம். அதற்காகத்தானே அனைவரும் வெறி கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். அந்த சந்தோசத்தை ஜாலியாக காமெடியோடு தருவதற்கு விஜய் டிவியில் புது சீரியல் ரெடியாகி விட்டது.

திங்கள் முதல் சனி வரைக்கும் 2.30 மணிக்கு நம்ம வீட்டு பொண்ணு என்னும் சீரியல் ஒளிபரப்பப்படுகிறது. இதன் ப்ரோமோ தான் தற்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

எத்தனை நாளைக்குத்தான் அழுகாச்சி சீன்களையே சீரியலில் பார்ப்பது என பீல் பண்ணி கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த சீரியல் முற்றிலும் மாறுபட்ட கலகலப்பு தான்.

புது காமெடி சீரியல்

புது காமெடி சீரியல்

விஜய் டிவியில் புதுசு புதுசாக எத்தனையோ நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும் அந்த நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறது. முதலில் சர்ச்சைகளில் சிக்கும் நிகழ்ச்சிகள் கூட பின்பு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரபலம் அடைந்து விடும். அதற்கு பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்றவற்றையும் உதாரணமாக சொல்லலாம். இந்த நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் போது பலரும் பலவிதமாக கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்குப் பிறகு டிஆர்பியில் எல்லா சேனல்களையும் அடித்து தூக்கிவிட்டு பட்டையை கிளப்பி விட்டது. அதுவும் காமெடியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து இப்போ புது காமெடி சீரியலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அப்போ இனி காமெடி வேட்டைதான்

அப்போ இனி காமெடி வேட்டைதான்

நம்ம வீட்டு பொண்ணு என்னும் புது தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதில் ஒரு சுதந்திரமாக செல்லமாக வளர்க்கப்பட்ட ஜாலியான துடிதுடிப்பான பெண் மீனாட்சி மற்றும் கூட்டு குடும்பத்தில் குடும்பப் பொறுப்புகளால் சூழப்பட்ட கார்த்திக் என்னும் கதாபாத்திரத்திற்கு நடக்கும் காதல் மோதல் மற்றும் காமெடியை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதையை பல திரைப்படங்களிலும் சீரியலிலும் பாத்திருந்தாலும் இந்தக் கதையில் சுவாரஸ்யங்கள் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கிறதாம். மீனாட்சிக்கும் கார்த்திக்கும் மிகவும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தால் என்ன நடக்கும்?அவர்கள் திருமணம் ஆகி கணவன்-மனைவி ஆக மாறும் போது உண்மையில் என்ன நடக்கும்? ஒற்றை குழந்தையாக வளர்க்கப்பட்ட மீனாட்சி கூட்டுக் குடும்ப சூழ்நிலையை மாற்றி அமைத்து அதற்கு தகுந்த மாதிரி குடும்பத்தை வழிநடத்த முடியுமா? என்பதில் தான் கதையில் திரில்லே இருக்கிறது .

பழசை எல்லாம் ஓரம் தள்ளியாச்சு

பழசை எல்லாம் ஓரம் தள்ளியாச்சு

எத்தனை நாளைக்கு தான் அழுகாச்சி சீன்களையும் ஒரே வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வஞ்சனை செய்யும் சீன்களையும் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த மாதிரி சீரியலை பார்த்தால் மனதும் அந்த மாதிரி உலகத்திற்கு உள்ளே சென்றுவிடும். அதனால் ரசிகர்களின் மனதினை ஜாலியாகவும் வைப்பதற்காக நம்ம வீட்டு பொண்ணு வருகிறார். துருதுருவென கேரக்டரில் வேடிக்கை மற்றும் மோதலை பார்க்க தவறாதீர்கள் என்று இந்த சீரியலின் பிரோமோவை அடிக்கடி விஜய்டிவி வெளியிட்டு வருகிறது. இதைப் பார்த்ததும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் இந்த சீரியலில் இருக்கும் நடிகர் பட்டாளத்தை பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கின்றனர். எல்லாமே காமெடி ஜாம்பவான்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போ காமெடிக்கும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை தான்.

காமெடி ஜாம்பவான்களின் ஆட்டம்

காமெடி ஜாம்பவான்களின் ஆட்டம்

இந்த சீரியலில் சுஜித் கார்த்திக் எனும் கேரக்டரில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி கேரக்டரில் மீனாட்சி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரவி வேலு கேரக்டரிலும் நித்தியா விசாலாட்சி கேரக்டரிலும் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான பல நடிகர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு பிரியதர்ஷினி இந்த சீரியலில் செல்வி கேரக்டரில் நடிக்கிறார். ரொம்ப அமைதியான தைரியமான பெண்ணாக இந்த சீரியலில் இவர் கேரக்டர் அமைந்திருந்தாலும், இவருக்கு அண்ணன் தான் எல்லாமே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு மேலே அண்ணன் பொண்ணு தான் உயிராக இருக்கிறார். அவருக்காக எதையும் செய்யும் செல்வி கேரக்டரில் பட்டையைக் கிளப்பப் போகிறார். திவ்யதர்ஷினியை ரொம்ப நாளைக்கு பிறகு இந்த சீரியலில் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் செம ஹாப்பி தான்.

கைகொடுக்கும் பாரதிகண்ணம்மா

கைகொடுக்கும் பாரதிகண்ணம்மா

ஒரு ஜாலியான கதையைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஆர்வம் கூட்டும் விதமாக இந்த சீரியலுக்கு பிரோமோட் கொடுத்து பாரதி கண்ணம்மா சீரியல் பாரதியும் கண்ணம்மாவும் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க சொல்லி ரசிகர்களிடம் கேட்டிருக்கின்றனர். இதைக்கேட்டதும் ரசிகர்களும் ஓகே என்று சொல்கிறார்கள். ஆனால் நெட்டிசன்கள் சும்மாவே பாரதியை ஐந்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் 50 ரூபாய்க்கு நடிக்கிறார் என்று கலாய்த்து வரும் நிலையில் இந்த சீரியலின் கார்த்திக்கும் முகத்தை உம்மென்று வைத்திருப்பதைப் பார்த்து இவரையும் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். சீரியல் வருவதற்கு முன்பே இப்படி என்றால் சீரியல் 16ஆம் தேதி ஒளிபரப்பு தொடங்கிய பிறகுதான் தெரியும் இது களைகட்ட போகிறதா என்று ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+