இணையத்தில் காதலை தேடுபவர்களுக்கு நீயா நானாவில் கிடைத்த அடி!கோபிநாத் கேள்வியால் மிரண்ட அரங்கம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் ஆன்லைனில் காதலியை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு கோபிநாத் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்.
ஆன்லைனில் காதலை நம்பி பலர் வாழ்க்கையில் ஏமாந்து போய் இருக்கும் நிலையில் தற்போது கோபிநாத் கூறிய பதிலை பலரும் வரவேற்று வருகிறார்கள்.
நிஜ காதலிக்கும் ஆன்லைன் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நீயா நானாவில் இந்த வாரம் கோபிநாத் கூறியதை கேட்டு அரங்கமே அதிர்ந்து போயிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பலதரப்பட்ட ரசிகர்களால் பாராட்டப்படும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமுதாயத்திற்கு தேவையான பல விஷயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்படும். அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக தமிழகத்தை மட்டுமல்லாமல் பல கோடி மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரத்தில் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. ஆன்லைன் காதல் சரியானது என்றும் ஆன்லைன் காதல் சரி வராது ஆபத்து என்றும் இரண்டு அணியினர் தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தனர். அவர்களுக்கான பதில் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

நீயா நானா நிகழ்ச்சியில் ஆன்லைன் காதலி எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாகவும், காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா? இரண்டு தரப்பு வாதங்கள் நடக்கிறது. அதில் ஒரு இளைஞர் என்னுடைய காதலி எந்த மூலையிலும் இருக்கலாம் அவள் எனக்காக வருவாள் என்று கூறுகிறார்.
அதை மறுக்கும் இன்னொரு நபர் காதல் ஒன்றும் மேஜிக் இல்லை. அதை கனவு கண்டு கொண்டு இருக்க முடியாது என்று கூறுகிறார். அதில் அந்த நபர் நான் மதுரைக்கார பையன். என்னுடைய வருங்கால மனைவி ஆன்லைனில் எங்க வேணாலும் இருக்கலாம். எனக்கு மதுரையில் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். என்னை பார்த்து என்னுடைய குணத்தை பார்த்து பிடிக்கும் பெண் எந்த ஒரு நாட்டிலும் இருக்கலாம் .அப்படித்தான் என்னுடைய இமேஜினேஷன் இருக்கிறது என்று சொல்கிறார்.

அதற்கு இன்னொரு நபர் நீங்க சொல்றது வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு வரப்போற காதலி எங்கேயோ இருக்கிறா என்று இமாஜினேஷன் பண்றது சரியா? என்று கேட்க, அதற்கு அந்த மதுரைக்கார நபர் எனக்கான ஏவால் எந்த இடத்திலும் இருக்கலாம். அதை நான் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன் என்று சொல்ல அதைக் கேட்ட கோபிநாத் முதலில் இவர் பேசுவதை கேட்கும் போது எனக்கு சரி என்று படவில்லை ஆனால் பிறகு இவர் பேசுவது தான் ட்ரடிஷனல் காதலாக இருக்கிறது. எனக்கானவள் எங்கேயோ இருக்கிறாள். நான் அவளுக்காக ஏங்குவேன் என்று கூறுகிறார். காதலில் இந்த அற்புதம் கூட இல்லன்னா எப்படி என்று கேட்கிறார்.
அதற்கு அங்கு இருக்கும் ஆன்லைன் காதல் சரிவராது என்று அணியில் இருக்கும் நபர் அவங்களை நீங்க எப்படி கண்டுபிடிப்பீங்க என்று கேட்கிறார். அதற்கு கோபிநாத் நீங்க இப்படி கணக்கு போட்டாலே அது காதல் கிடையாது. அவங்க எப்படி உங்க கண்ணுல மாட்டு வாங்க என்று கேட்டு, பிறகு காதல் என்பது மேஜிக்கா இல்ல ப்ரோபிலிட்டியா என்று கேட்கிறார். அதற்கு அனைவரும் மேஜிக் என்று கூறுகின்றனர்.
பிறகு கோபிநாத் அந்த மதுரைக்காரன் நபரிடம் உங்க வருங்கால மனைவி என்ன செஞ்சுட்டு இருப்பாங்க என்று நீங்க நினைக்கிறீங்க என்று கேட்க, அவங்கஒருவேளை ஏதாவது காபி ஷாப்பில் அவங்களுக்கு பிடித்த பையன் கூட பேசிக்கிட்டு இருக்கலாம் என்று சொல்ல, அதற்கு சிரித்தபடியே கோபிநாத் ஏன் அவங்க விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் நிற்கக்கூடாது.
ஏன் நீங்க மதுரைக்காரங்க தான அவங்க மாட்டுத்தாவணியிலேயே இருக்கக் கூடாது என்று கேட்கிறார். நம்ம சிந்தனை ஏன் ஏதோ ஒரு உலக நாட்டில் அழகான நாடு என்று நமக்கு சொல்லப்பட்ட நாட்டில் இருப்பாங்க என்று நினைக்குறோம். நாம நம்ம பக்கத்து தெருவுலையோ பக்கத்து ஊரிலேயே இருப்பாங்கன்னு நினைக்கிறதே இல்லை. அது ஏன் என்று கேள்வி கேட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications