இந்த மாதமே முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. திடீர் முடிவுக்கு காரணம் இதுதானா? லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அந்த சீரியல் இப்போதுதான் அதிரடியான திருப்பங்களும், சுவாரசியமாகவும் வந்திருக்கிறது. ஆனால் இந்த சீரியலை இந்த நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரசிகர்கள் அதிர்ப்த்தி தெரிவித்து வருகிறார்கள். அது எந்த சீரியல் என்று விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சின்னத்திரையில் புதியது புதியதாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சில சேனல்களில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும். பிறகு அதற்கு போட்டியாக மற்ற சேனல்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பானது. சில வருடங்களுக்கு முன்பு மற்ற மொழிகளில் ஹிட்டான சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு சின்னத்திரை திரும்பி இருக்கிறது.

இந்த மாதத்தோடு முடிவு
அதுபோல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் இளைஞர்கள் கொண்டாடும் வகையில் சில சீரியல்கள் இடம் பிடித்திருக்கிறது. அதில் பனிவிழும் மலர்வனம் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதிகமான எதிர்பார்ப்பு
காரணம் இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை வினுஷா தேவி கதாநாயகியாக நடிக்க இருந்தார். அதுபோல அவருக்கு ஜோடியாக நடிகர் சித்தார்த்தும் நடிப்பதாக இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல மௌனராகம் சீரியல் மூலம் பிரபலமடைந்த ஷில்பாவும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ரயான் நடித்திருந்தார்.
ரயான் அதற்கு முன்பு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் பனிவிழும் மலர்வனம் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார் என்றதும் இந்த சீரியலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார், அதனால் புதிய நடிகர் நடித்து வருகிறார்.

ஆர்வத்தை ஏற்படுத்திய ப்ரோமோ
அதுபோல ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ப்ரோமோ வெளியாகி ஒரு சில மாதங்களுக்கு பிறகு தான் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு நல்ல டிஆர்பி கிடைத்தது. ஆனாலும் தற்போது ட்ரெண்டில் இருக்கும் குழப்பமான திருமணமே இந்த சீரியலிலும் நடைபெற்றது. வினிஷா தேவி ஏற்கனவே ஒருவரை காதலித்து அவரோடு திருமணம் நடக்கும் தருணத்தில், கதாநாயகனின் தங்கையை வினுஷாவின் தம்பி திருமணம் செய்து விட்டார் என்ற கோபத்தில் கதாநாயகன் சித்தார்த்த் வினுஷா தேவிக்கு மணமேடையில் வந்து தாலி கட்டி விடுவார்.
அதற்குப் பிறகு வினுஷா தேவி சித்தார்த் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவருடைய குடும்பத்திற்கு வந்திருப்பார். பிறகு சித்தார்தை புரிந்து கொண்டு அவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இதுதான் இப்போது இந்த சீரியலில் கதையாக இருக்கிறது. ஆனால் இந்த சீரியல்தான் இந்த மாதத்தோடு முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லீக்கான தகவல்
இந்த சீரியலில் ஆரம்பத்தில் பிடிக்காத திருமணம் என்ற காரணத்தை சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் இப்போது கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி மற்றும் அன்பு ரசிகர்கள் மத்தியிலும் கவர தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த சீரியல் திடீர் முடிவு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

முடிவுக்கு காரணம்
ஆனாலும் இந்த சீரியலின் டிஆர்பி எதிர்பார்த்து அளவிற்கு இல்லை என்பதால் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சமீபத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒரு வீடியோ எடுத்திருந்தனர். அந்த வீடியோவில் மார்ச் மாதத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்பது போல அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவு இன்னும் எத்தனை நாளில்! வெளிப்படையாக பேசிய ரேஷ்மா
ஆனாலும் அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் சேனல் தரப்பிலிருந்து வெளியிடவில்லை. இதனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீரியல் தொடர போகிறதா? அல்லது முடிவுக்கு வரப் போகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications