சூப்பர் சிங்கரில் பரபரப்பு.. இசையமைப்பாளர் வித்யாசாகர் பூஜாவிற்கு கொடுத்த அதிர்ச்சி
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் முறையாக இசையமைப்பாளர் வித்தியாசாகர் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த வாரம் இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடல்கள் ரவுண்டு நடைபெறுகிறது.
அதில் பூஜா பாடிய பாடலைக் கேட்டு வித்தியாசாகர் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் சாதாரண மக்களின் திறமைகளை நிரூபிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பலர் தங்களுடைய திறமையின் காரணமாக பிரபலங்கள் ஆகின்றனர். அந்த வகையில் தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலர் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் வித்தியாசாகர் ஸ்பெஷல் ரவுண்ட் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் வித்யாசாகரின் இனிமையான மற்றும் ஹிட்டான பல பாடல்களை பாடி வருகிறார்கள்.
சின்னத்திரையில் முதல்முறையாக வித்தியாசாகர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுவும் ஒன்பதாவது சீசனில் அறிமுகம் ஆகி இருக்கிறார் என்பது ஒரு பெருமையான விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் போட்டியாளர்கள் பாடும் பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த வித்யாசாகர் பாடகி பூஜா பாடிய பாடலை கேட்டு மெய்மறந்து பாராட்டி இருக்கிறார்.
நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா நடித்த ஜீ திரைப்படத்திலிருந்து டிங் டாங் கோவில் மணி என்னும் பாடலை பூஜா பாட அதைக் கேட்டு ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசாகர் ரசித்துக் கொண்டிருந்தார். பிறகு இவங்க ஒரு பாரம்பரியமான குரலில் பாடுகிறார்கள். இனி நீங்க சோலோ பாடல் எனக்கு பாட வேண்டும் என்று வித்தியாசாகர் பூஜாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த பூஜாவை அங்கிருந்த பிரபலங்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.

இப்போது இந்த ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் வித்யாசாகர் முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகிய இருப்பதை பலரும் வரவேற்று வருகிறார்கள். அதோடு பூஜாவின் திறமையை கண்டுபிடித்து அவருக்கு வாய்ப்பு வழங்கிய வித்யாசாகருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications